Tnpsc chemistry 2023: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கும் வேதியியல் முக்கிய வினா விடைகள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினமும் ஒரு பகுதியை படைத்து பயிற்சி செய்ய ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.மின்விளக்குகளில் மின் இழை ஆவியாவதை தடுக்க உதவும் வாயு எது?
விடை : ஆர்கான்
2. நவீன தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்கள் எதன் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகின்றன?
விடை : அணு எண்
3. பீரங்கி வெண்கலம் என்பது எதன் இயைபு ஆகும்?
விடை : Cu, Sn,Zn
4. வாகனத்தின் முகப்பு விளக்கு எதன் அடிப்படையில் வேலை செய்கிறது?
விடை : டிண்டால் விளைவு
5. நைட்ரஜன் உரங்களில் எது உயர் நைட்ரஜன் விழுக்காடு கொண்டது?
விடை : யூரியா
6. நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் எந்த நிறை விகிதத்தில் உள்ளது?
விடை : 1 : 8
7. கடின நீரை மென்நீராக மாற்ற பயன்படுவது?
விடை : சலவை சோடா
8. அமிலங்கள் எந்த சுவையை உடையது?
விடை : புளிப்பு
9. வெங்காயம் நறுக்கும் பொழுது நாம் கண்களில் கண்ணீர் வர காரணமான வாயு எது?
விடை : புரொப்போன்தயால் எஸ் ஆக்சைடு
10.நீர்த்த அமிலங்களுடன் உலோக கார்பனேட்டுகள் மற்றும் பைகார்பனேட்டுகள் வினைபுரியும்போது பெறப்படும் வாயு எது?
விடை : கார்பன் டை ஆக்சைடு