Tnpsc Zoology 2023: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கும் 10 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய வினா விடைகள்
நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு உங்களை உறங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு என்று அப்துல்கலாம் கூறியது போல உறங்காமல் கண் விழித்து தினமும் படித்துக் கொண்டிருக்கும் டிஎன்பிஎஸ்சி நண்பர்களுக்கு போட்டி தேர்வு எதிர்கொள்ள உதவும் வகையில் ஒரு சில முக்கிய வினா விடைகள்
முக்கிய வினா விடைகள்
1.DNA வை வெட்டப் பயன்படும் நொதி எது?
விடை : வரையறை நொதி
2.DNA வை ஒட்டப் பயன்படும் நொதி எது?
விடை : டி. என். ஏ லிகேஷ்
3.ரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிட பயன்படுவது எது ?
விடை : உயிர் உணரி
4. ஆற்றல் மாற்றம் மற்றும் வளர்ச்சிதை மாற்றம் ஒழுங்குபடுத்துவதில் பயன்படுவது?
விடை : வைட்டமின்கள்
5. வைரஸ்களுக்கு எதிரான புரதம் எது?
விடை : இண்டர் பெரான்
6. மெண்டல் தோட்டப்பட்டாணியில் எத்தனை வகையான மாற்று உருவ வேறுபாடுகளை கண்டறிந்தார்?
விடை : 7
7. உடலுறுப்பு பயன்பாட்டு விதியை நிரூபிக்க லாமார்க் உதாரணமாக கூறிய விலங்கு எது?
விடை : ஒட்டகச்சிவிங்கி
8. இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்ட ஜீன் அமைப்பின் பெயர் என்ன?
விடை : அலீல்கள்
9. தேவையும் எண்ணமுமே உடலுறுப்பின் மாற்றத்திற்கு காரணம் எனக் கூறியவர் யார்?
விடை : லாமார்க்
10. எந்த நோய்க்கு எதிராக முதன் முதலில் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது?
விடை : ஹெபடைடிஸ் B வைரஸ்