அடையாறு காவல்துறையினர் கலக்கும் பேரிடர் மீட்புப் பணி
நிவர் புயல் எதிரொலியால் கடந்த இரு நாட்களாக சென்னை முழுக்கவே பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வந்தன. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாமல் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த மகத்தான பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
- கடந்த இரு நாட்களாக சென்னை முழுக்கவே பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தன.
- மாவட்ட காவல் துறையினர் எச்சரிக்கை.
- சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த மகத்தான பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
அடையார் பகுதி மக்களுக்கு அதிக பாதிப்புகள் என்பதால் மாவட்ட காவல் துறையினர் எச்சரிக்கையுடன் இருந்து வந்தனர். டிசிபி விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் காவல்துறையினர் சாலைகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் படங்களை பகிர்ந்து பாராட்டியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகி இருக்கும் நிவர் புயல். மாமல்லபுரத்திற்கு – பாண்டிச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்பதால் வங்க கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 5 மீட்பு குளித்தலை அமைத்துள்ளன.
அரசு செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.