தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை வழங்கும் புதுமையான தமிழ் இலக்கிய பாடத்திட்டம்
படிப்பு காலத்தில் சிறப்பு அம்சங்களையும் காணொளி வகுப்புகள், இணையவழி கலந்துரையாடல், நேரடி வகுப்புகள் என்று நடைமுறைப்படுத்தி உள்ளனர். இறுதி தேர்வு 70 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதினால் போதும். 30 மதிப்பெண்களுக்கு வீட்டிலிருந்தே அசைன்மென்ட் எழுதி அனுப்பலாம். 1, 2 பாடங்களில் தேர்ச்சி பெறாவிட்டால் உடனடியாக மறு தேர்வு எழுதும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பாடநூல்களின் உதவியுடன் NET, SET தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும். மேலும் டிஎன்பிஎஸ்சி மற்றும் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் போன்ற குடிமைப்பணி தேர்வு எழுதுகிறவர்களுக்கும் இந்த படிப்புகளும் அதற்குரிய பாடநூல்களும் மிகவும் பயன்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழ் கற்பிக்கும் நுட்பங்களும் கற்றுத்தரப்படுகின்றன.
வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்ற உதவும் வகையில் விரிவும், நுட்பமும் கொண்ட பாடத் திட்டங்களை தனித் தன்மையுடன் உருவாக்கி மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இன்றைய சூழலில் வேலை வாய்ப்பிற்கு உதவும் வகையில் மொழித்திறன் அதாவது பிழையின்றி எழுதும் சிறப்பு பயிற்சி. ஆவணங்கள் தயாரித்தல், மேடைப்பேச்சு, கட்டுரை, திறனாய்வு எழுதுதல், ஊடகங்களுக்கு எழுதும் கலை, உள்ளிட்ட பல்வேறு படைப்பு நுட்பங்கள் பி.லிட் பி.ஏ படிப்பில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
நேரடி முறையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியிலும் பாடநூல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழின் செம்மொழி களஞ்சியமான சங்க இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள உதவியாக சங்க இலக்கியம் தொடர்பான பாடநூலை வெளியிட்டுள்ளார்கள். இதுபோன்ற ஒப்பிலக்கியம் என்ற நூல் இந்திய மொழிகளின் இலக்கியங்களையும் ஒப்பிட்டு அறிந்து கொள்ள துணை நிற்கிறது.
இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் எழுதுவதற்கும் படைப்பிலக்கியங்கள் ஆன கவிதை கதை புதினம் எழுத பயிற்றுவிக்கும் நோக்கிலும் பாடநூல்களை தயாரித்துள்ளார்கள். பிளஸ் டூ படித்த மாணவர்கள் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். எம்.ஏ படிப்பில் சேர விரும்புவோர் ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் தொல்காப்பிய பாடநூல்கள் முழுமையாகவும், எளிமையாகவும் உள்ளது. சிறப்பு அம்சமாகவும் இருக்கிறது,
நவீன இலக்கியப் போக்குகளை நுட்பமாக தெரிந்து கொள்ள இக்கால இலக்கியம் என்ற பாடம் இடம் பெற்றுள்ளது. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று தொல்காப்பிய பாடநூல்களும் தலைசிறந்த வல்லுநர்களால் எழுதப்பட்டுள்ளன. எம்.ஏ தமிழ், பி.ஏ தமிழ், பி.லிட் தமிழ், படிப்புகள் தொலைநிலை கல்வி வழியாக வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழ் பாடத் திட்டம் தனித் தன்மையுடன் உயர் தரத்தில் அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க கடைசி நாள் 31.8.2020 இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு 044 24306663 / 24306664 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். கட்டண விபரம் இரண்டாண்டு
எம்.ஏ படிப்புக்கான கட்டணம் Rs.3300 ஆண்டிற்கு
பி.ஏ, b.lit படிப்புக்கான கட்டணம் ஆண்டிற்கு Rs.2200 விபரங்களுக்குwww.tnou.ac.in
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டு புலம் சார்பில் நவீன பாடத்திட்டத்துடன் தமிழ் இலக்கிய பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளன. இங்கு பி.ஏ, எம்.ஏ, பி.லிட் படிப்புகளில் சேர தகுதியும், விருப்பமும் கொண்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.