தமிழக இளைஞர்கள் திறன் மேம்பட வேலைவாய்ப்பு பெற பயிற்சி
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்க திட்டம். இளைஞர்களின் திறனை மேம்படுத்த தமிழகஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞ்கள் மாணவர்களுக்கு தேவைப்படும் பயிற்சியை வழங்கத் தமிழக முதல்வர், அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கின்றார்.
தமிழ்நாட்டில் மாணவர்களின் திறன் மேம்பாடு இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு வழியமைக்கின்றது. டிஎன் ஸ்கில் திட்டம்கீழ் தளத்தில் புது ஒப்பந்தத்தின் மூலம் திறன் மேம்பாட்டு திட்டத்தை விரிவுபடுத்துகின்றது தமிழ்நாடு அரசு என்பது குறிப்பிடத்தக்கதாகும். தலைமைச் செயலகத்தில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் திட்டம் இவற்றின் கீழ் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான திறன் மேம்பாட்டு மையம் அமைக்க இருக்கின்றது.
இந்த திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு தி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அமெரிக்க நிறுவனமான கோர்செரா இணையவழி கற்றல் துறையில் சிறந்து விளங்குகின்றது. இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் கூகுள் நிறுவனம் ஐடி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பல திறன் திட்டங்கள் வழங்குகின்றது. ஆன்லைன் மூலம் மாணவர்கள், இளைஞர்கள் அதிகம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. அவர்களது திறன் குறைபாட்டைத் தீர்க்க இது வாய்ப்பாக இருக்கும் என்றே கருதப்பட்டு இருக்கின்றது.
இதுகுறித்து அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது. உலகெங்கிலும் 80 நாடுகளில் இந்நிறுவனம் சிறந்த பயிற்சி வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு திறன்கல்வி வழங்கி அவர்களின் திறன் மேம்பாட்டுக்கு வழியமைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஒப்பந்தமானது நிறுவப்பட்ட இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
டெல்லியில் அகில இந்திய திறன் போட்டியில் தமிழகம் கைவினைஞர் பயிற்சியில் முதல் மாநிலமாகத் தேர்வாகி மத்திய அரசின் திறன் மேம்பாட்டு தொழில் முனைவோர் திட்டத்தில் சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுபோல மாணவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெற இளைஞர்கள் மாணவர்கள் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் என்று கருதப்படுகின்றது.
தமிழ்நாட்டில் http://http//www.tnskill.tn.gov.in தளத்தில் தேவைப்படுவோர் பதிவு செய்து திறன் வளர்க்கும் பயிற்சிப் பெறலாம்.