சட்டமன்ற தேர்தலுக்கு தயராகுங்கள் மக்களே
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில நடைபெறுகின்றது. சட்டமன்றத் தேர்தல் தேதிகள் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தார். இதனையடுத்து கட்சிகள் மும்முரமாக தங்களது அரசியல் பணியில் இறங்கி விட்டன. கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கட்சி பெயர் அவை அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து வருகின்றது.
தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மார்ச் 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கான இறுதி தேதி ஆகும் வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ஆம் தேதி வேட்பாளர்கள் தங்கள் மனுவை திரும்பப் பெற மார்ச் 22 ஆம் நாள் இறுதி நாளாகும்.
ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்கு பதிவு தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கூட்டணிகள் பேரம்
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளை இணைத்து பல்வேறு தேர்தல் யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதன் மூலம் வெற்றி பெறுவது யார் என்ற போட்டோ போட்டியானது நடைபெறுகின்றது. இதனிடையே மக்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் படித்தவர்கள், படிக்காதவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்களே விழிப்புணர்வு வேண்டுமே
கருணாநிதி, ஜெயலலிதா அவர்கள் இல்லாமல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடைபெற வேண்டியது அவசியமாகின்றது. மக்கள் விழிப்புணர்வுடன் ஓட்டளிக்க வேண்டும். ஜாதி சார்ந்து, சொந்தம் பந்தம் சேர்த்து ஓட்டு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த முறை சட்டமன்ற தேர்தல் ஓட்டு மக்களின் புத்திக்கும், மனிதனுக்குமான சமநிலைபாடு குறித்து தெரிந்து கொள்வதற்கு இது சரியான காலமாகும்.
ஓட்டளிக்க ஜனநாயக கடமை
மக்கள் தங்களது வேட்பாளர்கள் குறித்தும் முழுமையாக தெரிந்து கொண்டு ஓட்டு அளிக்க வேண்டியது அவசியமாகின்றது. குடும்பத்தினருக்காகவும், சுற்றத்தினர் வலியுறுத்தலுக்காகவும் ஓட்டு அளிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டளிப்பது ஜனநாயக கடமை இதனை படித்தவர்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.
மக்கள் தீர்பு மகேசன் தீர்ப்பு
தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழ்நாட்டிற்கு வெளியே இருப்பவர்கள் தவிர உள்ளூரில் இருப்பவர்கள் கட்டாயம் ஓட்டளிப்பது சுய கடமையாக நினைத்து ஜனநாயக கடமை ஆகும். உங்களது வேட்பாளர்களின் முழு விவரங்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இந்த தேர்தல் மக்களின் கையில் மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று சொல்லப்படுகின்றது.
மக்கள் தங்களுடைய அரசியல் அறிவை முறையாக பயன்படுத்தி தங்களது வேட்பாளர்களுக்கு தக்க பாடம் நடத்த வேண்டிய கட்டத்தில் இருக்கின்றனர். காசுக்கு ஓட்டு போடும் கயவர்கள் அல்ல மக்கள் என்பதை உணர்ந்து ஓட்டுப் போடுங்கள் மக்களே!…