தமிழக முதல்வர் கொரோனா தடுப்பூசி குறித்து விளக்கம்
தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டன. இதனால் ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தாக்கம் குறைந்துள்ளன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி நல்ல முன்மாதிரியாக தமிழகம் மாறியுள்ளது.
- முன் களப் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்த தமிழக முதல்வர்
- கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி நல்ல முன்மாதிரியாக தமிழகம் மாறியுள்ளது.
- மிகப்பெரிய அளவில் மாநில பொருளாதாரம் மீட்கப்பட்டுள்ளன.
சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை தர 2000 மினி கிளினிக்குகள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கிளினிக் வசதிக்கு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து வருகின்றனர்.
மிகப்பெரிய அளவில் மாநில பொருளாதாரம் மீட்கப்பட்டுள்ளன. கடைக்கோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் இலவசமாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக கையாண்டது போல, இனிவரும் காலங்களிலும் சிறப்பாக கையாளும். முன் களப் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்ததுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தை தமிழக அரசாங்கம் எப்படி கையாண்டது?நெருக்கடிகளை எப்படி சமாளித்து மீண்டு வந்தன. இனிவரும் காலகட்டங்களை எப்படி எதிர்கொள்ளும்? என்பதை பிரத்தியேகமாக பகிர்ந்தார்.