வானிலை ஆய்வு மையம் தமிழக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெயில் தணிந்து காற்றுக் காலம் ஆரம்பித்த நிலையில் ஆடி பிறப்பதற்கு முன்பாகவே ஆனியில் வெப்பம் காரணமாக திருவண்ணாமலை, தேனி, நெல்லை, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரங்களிலும், இரவிலும் அதிக மழை பெய்து வருகின்றன.
இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, தேனி, நீலகிரி, கோவை, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உள்ள அம்மன் புயலால் நேற்றைய தினம் சில இடங்களில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னையிலும் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
வங்கதேசம் இடையே ஆம்பல் புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், தேவாலா, கோவை மாவட்டம், சின்னக்கல்லார், வால்பாறை, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் மழை 4 சென்டி மீட்டருக்கு பதிவாகியுள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.
சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.