ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை திருவெம்பாவை பாடல் 12 ஆம் நாள்!

திருப்பாவை, திருவெம்பாவை நம் வாழ்வில் முக்கியமானதாகும் . இறைவன் அருள் பெற்று வாழ நமக்கு இது உதவுகின்றது. மார்கழி மாதத்தில் இறைவனுக்காக பாவை நோன்பானது கடைப்பிடிக்கின்றது.

திருப்பாவை -12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால் சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

தோழியின் வீட்டு வாசலில் பால் கொடுக்கின்றன அந்தப் பால் வீட்டு நுழைவாயில் உள்ளே நுழைய முடியாதபடி படர்ந்திருந்தது வீட்டு வாசலுக்கும் கன்று குட்டிகள் பாலுக்காக அங்கும் இங்கும் திரிகின்றன.

எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலை ஹிந்தி செல்கின்றன. இல்லத்து வாசலை குளமாக்குகின்றது இத்தகைய பால் சொரியும் வளம் பெற்ற ஆயர்குல நாயகனின் தங்கையே பனி மழை பெய்கின்ற போதிலும் தலை நனைந்து உன் வீட்டு வாசலில் உனக்காக காத்து நிற்கின்றோம். சீதையை காத்து நின்ற ராமன் புகழ் பாடி நாராயண பெருமை பாடுகின்றோம் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே எழுந்திரு.

ஆயர்பாடி எழுந்துவிட்டது நீ இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கின்றாய் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. பனியின் குளிர்ச்சி படர்ந்து கிடக்கின்றது. தினமும் அதிகாலையில் இறைவன் புகழ்பாட இழந்திருக்கின்றோம் சிரமங்கள் பல கடந்து இறைவனை அடைவதை இது குறிக்கின்றது.

திருவெம்பாவை – 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந் தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

பாடல் விளக்கம்:

நீர், ஆகாயம் , நிலம், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களையும் தன்னுள் அடக்கி , படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஒரு

திருவெம்பாவை பஞ்ச பூதங்களான நீர், ஆகாயம், நிலம், காற்று நெருப்பு ஆகியவை தன்னுள் கொண்டவர் சிவபெருமான். சிவன் அருள் பார்வை பெற்ற பின்பு காத்தல், அழித்தல், படைத்தல் நடைபெறுகின்றது.

ஐம்பூதங்களையும் தன்னுள் அடக்கி முத்துக்களையும் நடக்க வைக்கும் மிகப் பெரும் ஆற்றல் கொண்டவர் சிவபெருமான் இவரைப் பற்றி நிற்க வேண்டும் என்பதை மாணிக்கவாசகர் உணர்த்துகின்றார்.

இந்த பிறவியில் துன்பம் தடுக்க கங்கையைத் தலையில் கொண்ட என்னைய நாயகன் சிதம்பரத்தில் நடனமாடும் சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் தன்னகத்தே கொண்டவர். இவரை அடைந்து அவர் வாழ்வில் முக்தி பெறலாம். சிவபெருமானின் பாதம் வணங்கி வளையல்கள் ஒலியெழுப்பி பூக்கள் சிந்தி சிவாய நமவென்று மந்திரம் சொல்லி அவரை சரணடைவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *