திருவெம்பாவை – 11பாடல்
திருவெம்பாவை பாடல் சிவபெருமான் திருநீற்றைக் தனதாக கொண்டவர். அக்னிக்கு நிகரானவர் அண்டத்தின் ஆணிவேர் எம்பெருமானாவார்.
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.
பாடல் விளக்கம்:
திருவம்பாவை பாடலில் மாணிக்கவாசகர் சிவபெருமானை நெருப்புக்கு நிகரானவர் என்றும், தூய்மையான செந்நிறம் கொண்வர் திருநீற்றீல் மூழ்கிய இசை பெருமானே!, உமையால் உன்னாமலை தாயார் சிற்றிடையைவர், அக்னி போல் கண்களை கொண்ட அன்னை தாயவளின் கணவரே, உமது அடியார்கள் குளத்தில் வளர்ந்து நிற்கும் பூக்களை தேடிவரும் வண்டுகள்போல உன் திருவடிகளை எண்ணிப் உன் நாமம் பாடுகின்றோம்!.
மேலும் படிக்க ; 15 ஆம் நாள் திருப்பாவை திருவெம்பாவை பாடல்
இந்த பாவை நோன்பை வழிவழியாக பின்பற்றி வருகின்றோம். நீ அறிவாய் தலைவா, என் தலைவனே! எம்மை காத்தருள வேண்டும் என்று திருவம்பாவை பாடலில் மாணிக்கவாசகர் பாடியுள்ளார். பாவை நோம்பு பெருமையானது யாகங்கள் பல செய்து பெற்ற பெயர் அனைத்தும் சிவபெருமான் திருவிளையாடல் பெறுவது போல காட்டப்பட்டிருக்கின்றன