திருவெம்பாவை 18 ஆம் பாடல்
திருவெம்பாவை பாடலில் ஆதிசிவன் திருவடிகளை தேவர்கள் அனுகி விலைமதிப்பற்ற மணிமுடிகளில் தேவர்கள் மணிமுடி சென்றடையும் அதுபோல் திருவடி நிழலில் சரண் அடையும் போது ஒளியானது காணாமல் போகின்றது.
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றாற்போல்
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கு ஒளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
மேலும் படிக்க : திருவெம்பாவை பாடல் 16
அண்ணாமலையார் ஆகிய சிவபெருமானின் திருவடிகளை சரணடையும் தேவர்கள், அவர்களின் தலையில் பலவிதமான விலைமதிப்பற்ற மணிகளை தங்களின் மணிமுடிகளில் தாங்கி இருக்கிறார்கள். இவர்கள் இறைவனின் திருவடி நிழலை சென்று அடையும் அடையும் போது அந்த விலையுயர்ந்த கற்களை ஒளியானது காணாமல் போய் விடுகிறது. அது போல் மனிதர்களாகிய நாமும் எத்தனை பெரிய மதிப்புடையவர்களாக இருந்தாலும் இறைவனின் பெருமைகளுக்கு முன் அவை அனைத்தும் காணாமல் போய் விடுகிறது.