திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம் 2023 பலன்கள்
கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது ஐயப்ப சாமியும் கார்த்திகை தீபமும் தான். கார்த்திகை மாத தீபத்திருநாள் மிக பிரமாண்டமாக வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.2023 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் வருடத்தில் ஒரு முறை ஏற்றப்படும் திருவண்ணாமலை பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்தை காண பயபக்தியுடன் செல்வர். நவம்பர் 17, 2023 கார்த்திகை ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா இனிதே தொடங்கியது. காமதேனு வாகனத்தில் ஈசன் வலம் வருதல், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம் என விசேஷங்கள் நடைபெற்று திருவண்ணாமலையின் உச்சகட்ட கொண்டாட்டமான கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 26 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காண ஆர்வத்துடன் இருப்பீர்கள். அவ்வாறு தரிசனம் காண செல்ல விரும்பும் பக்தர்கள் பரணி தீப தரிசனத்தை காண நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணி முதல் 3.30 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல் மாலை நடைபெறும் மகா தீப தரிசனம் காண செல்லும் பக்தர்கள் நாம் 26 பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருவண்ணாமலை திருக்கோவிலில் கிழக்கு ராஜகோபுரம் சென்று இந்த வருடம் தீப தரிசனத்தை கண்டு சிவபெருமானின் முழு அருளை பெறுங்கள்.
திருவண்ணாமலை தீப தரிசனம் 2023
உலகம் முழுவதும் கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட்டாலும் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்க்கு அவ்வளவு வரவேற்பு உள்ளது.
அதற்கு காரணம் திருவண்ணாமலை தீபத்தை காணும் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை சிவபெருமான் மனம் மகிழ வழங்குவார் என்பது ஐதீகம்.
வருடத்திற்கு ஒருமுறை வரும் தீப திருநாளில் திருவண்ணாமலை தீப தரிசனத்தை காணும் பக்தர்களுக்கு அவர்கள் மனதில் நினைத்த காரியம் தங்கு தடை இன்றி நடைபெறும்.
குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகளுக்கு திருவண்ணாமலை தீப தரிசனம் பார்த்து சிவபெருமானை வணங்கும் பொழுது அடுத்த வருடம் கார்த்திகை தீபத்திற்குள் உங்கள் வீட்டில் குட்டி சிவபெருமான் வலம் வருவார்.
திருவண்ணாமலை தீப தரிசனத்தை பார்க்கும் பக்தர்கள் வீட்டில் தீய சக்திகள் எனும் இருள் நீங்கி வீட்டில் தெய்வீக சக்திகளின் வெளிச்சம் வரும். அன்றைய நாளிலிருந்து வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிவபெருமானின் அருளால் மன நிம்மதியுடனும் மன தைரியத்துடனும் இருப்பீர்கள்.
திருவண்ணாமலை தீப தரிசனம் பார்க்கும் பொழுது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி தீபத்தில் தெரியும் பிரகாசத்தை போல் மனதிற்குள் உற்சாகமும் தெளிவும் பிறக்கும்.