திருப்புகழ் 192 வசனமிக ஏற்றி பழநி
திருப்புகழ் பாடல் பழநியில் சரவண பவ ஆறெழுத்து மந்திர ஜெபம் நாம் உச்சரித்து உருவேற்றி முருகனை மறவாமல் வேண்டும்பொழுது நம்மை எங்கிருந்தாலும் காத்து ரட்சிப்பார் கந்த பெருமான். வசனமிக வேற்றி …… மறவாதே மனதுதுய ராற்றி …… லுழலாதே இசைபயில்ஷ டாக்ஷ …… ரமதாலே இகபரசெள பாக்ய …… மருள்வாயே பசுபதிசி வாக்ய …… முணர்வோனே பழநிமலை வீற்ற …… ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி …… மிகவாழ அமரர்சிறை மீட்ட …… பெருமாளே. விளக்கம் வசனமிக ஏற்றி … உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து மறவாதே … (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து, மனது துயர் ஆற்றில் … என் மனம் துயரம் தரும் வழிகளில் உழலாதே … அலைந்து திரியாதிருக்கவும் இசைபயில் … மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஷடாட்சரம் அதாலே … ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ) தரும் பயனாலே இகபரசெள பாக்யம் … இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை அருள்வாயே … அருள் புரிவாயாக பசுபதிசி வாக்யம் … சிவபிரானது வேத சிவாகமங்களை உணர்வோனே … அறிந்தவனே பழனிமலை வீற்(று) … பழனிமலையில் எழுந்தருளியிருந்து அருளும் வேலா … அருள் புரியும் வேலனே அசுரர்கிளை வாட்டி … அசுரர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும், மிகவாழ அமரர் … தேவர்கள் நன்கு வாழும்படியாக சிறை மீட்ட பெருமாளே. … சிறையினின்று மீட்டுவித்த பெருமாளே மேலும் படிக்க : திருப்புகழ் 190 முருகுசெறி குழலவிழ பழநி பாடல். |