திருப்பாவை திருவெம்பாவை 5 ஆம் நாள்
திருப்பாவை, திருவெம்பாவை இறைப்பக்தியை அடைய நாம் எவ்வாறு அவரிடம் அன்பு கொண்டு செயல்பட வேண்டும் என்பதை இது உணர்த்துகின்றது.
திருப்பாவை பாடல் – 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
விளக்கம்:
மதுரை நாயகன் குழலூதும் கண்ணன் அவருடைய செயல்கள் என்றுமே நமது கற்பனைக்கு எட்டாத இருக்கும் யமுனை நதிக்கரையில் கோபியருடன் விளையாடி மகிழ்ந்தவர்.
ஆயர்பாடி பெண்களுக்கு அன்பு தந்தவர் தாய் தேவகிக்கு தர்மபுத்திரன் கண்ணன் குறும்புகள் பல செய்யும் கண்ணன் இதனால் கயிற்றில் கட்டப்பட்ட போது கையெழுத்து தழும்பானது கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.
தூய்மையான அன்புடன் மாயவனை நேசித்தால் அவரது நற்குணங்கள் புகழ் பாடினாள் சிந்தலகரை ஏற்றினாள் நமது பாவங்கள் அனைத்தும் பிடிபடும் இனிமேல் செய்யவிருக்கும் பாவங்களும் விடுபடும். அந்த இறைவனே வந்து நமக்கு அருள் தரும் இத்தகைய சிறப்புமிக்க தயாள கொண்ட தாமோதரனை வணங்குவோம். அவரை நேசித்துப் பாவை நோன்பு இருப்போம் என அழைக்கும் ஆண்டாள்
திருவெம்பாவை பாடல் – 5
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
பாடல் விளக்கம்:
சிவபெருமான பெருமைகள் நாம் உணர வேண்ட்ய அற்புத கருத்துக்களை கொண்ட இந்தப் பாடல் சிவபெருமான் ஆதி அந்தம் அற்றவர், தேவர்களாலும் அவரை அறிய முடியாது என்பதை தெரியப்படுத்தி இருப்பார்.
திருமால், பிரம்மன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட யார் பெரியவர் போட்டிகளில் முடிவினை தெரிந்துகொள்ள ஈசன் அடிமுடி தேடிய திருமாலும் பிரம்மனும் முயற்சியில் இறங்கினர். பிரம்மனின் தலையை நோக்கி செல்ல, திருமால் ஈசனை அடியை நோக்கி கிழே சென்று கொண்டார் காண முடியவில்லை விஷ்ணுவும் தன் தோற்றத்தை ஒத்துக்கொண்டார்.
ஆனால் தலைப்பகுதி நோக்கி மேலே சென்றுக் கொண்டிருக்க மேலே முடியைக் கண்டதாகச் சொல்லித் தாழம்பூ படம் பொய் சொல்லச் சொன்னார் ஈசன் முடியைக் கண்டதாகத் தாழம்பூ பொய் கூறியது.
இதன் விளைவு சாபம் பெற்று தாழம்பூ பூஜைக்குப் பயன்படுத்துவதில்லை அவ்வாறு பிரம்மா இருக்கும் பூலோகத்தில் உருவ வழிபாடு கிடையாது இத்தகைய சிறப்புமிக்க சிவபெருமானே சிவசிவ என்று அழைத்து அவரை வணங்கிப் போற்றுவோம்
சிவபெருமானின் ஆணவம் போக்கி அவரைப் பக்தியால அனுக வேண்டும். அவரிடம் அளவற்ற பிரியம் கொண்டு அவரை வணங்கி மாயை இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சிவபெருமானை அடைய அன்பு அளவற்ற அடக்கம் போதும்.