திருவெம்பாவை திருப்பாவை
திருவெம்பாவை – 2. இறைவன் புகழ்பாட எழுப்புதல் மார்கழி மாதத்தில் சிவனையும் ஹரியையும் நினைத்து பக்தியுடன் பாவித்து அவர்களைப் போற்றி திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறை அருள் பெறலாம்.
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்
இந்த பூமியின் வாழ்க்கையை சிவபெருமானின் பக்தியானது அவசியம் அவரை எண்ணி சிற்றலம்பத்து நாயகனை எண்ணி நாம் வணங்க வேண்டும். விண்ணவருக்கும் மண்ணவருக்கும் இவர் மன்னவர் போன்றவர், நீங்க்காத பக்தியுடன் இவரை வணங்குதல் சிறப்பான பலன் தரும்.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ;
பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம்,
நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம்,
தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்!
பொருள்:
பாவை நோம்பு பக்தியின் அடையாளம் ஆகும். திருப்பாற்க்கடலில் துயில் கொள்ளும் அரியின் புகழ் பாடி அருள் பெறலாம். நோன்பு குறித்து அறிய வேண்டியது அவசியம் என்பதை ஆண்டாள் தெரிவிக்கின்றார்.
மேலும் படிக்க : நவராத்திரி இரண்டாம் நாளில் பஞ்சாங்கமும் உங்களின் ராசி பலனும்….