ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை திருவெம்பாவை 27வது நாள் பாடல்!

திருப்பாவை, திருவெம்பாவை 27வது நாள் பாடல்கள் மார்கழி மாத முடிவு நாட்களில் சிறப்பான பக்தியுடன் பாடப்படுவது ஆகும். ஆண்டாள் ஆயர்பாடி கண்ணனை கோவிந்தா என மனதார நினைத்து ஆராதித்துப் பாடுகின்றார். திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் தன் பக்தியை உருக்கிப் பாடுகின்றார்.

திருப்பாவை 27

கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய்.

விளக்கம்

பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா, உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும்.

ஆடைகளையம், வளைகளையும், செவிப்பூக்களையும், பலவித அணிகளன்களையும் அணிந்து மகிழ்வோம். சர்க்கரைப் பொங்கலாக தித்திக்கும் பால் சோறு மறையும் அளவுக்கு அதில் நெய் ஊற்றி சேர்த்து உண்போம். அனைவரும் கூடி அதை சாப்பிடும்போது எங்கள் முழங்கை வரை நெய் ஒழுகும். அதை நீ கண்டு மனம் குளிர வேண்டும். திருப்பள்ளி

எழுச்சி – 27

அதுபழச் சுவையென அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு வுத்தர கோச மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

மேலும் படிக்க : திருவெம்பாவை திருப்பாவை

விளக்கம்

தேன் சோலைகள் நிறைந்திருக்கும் திரு உத்தரகோச மங்கை திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பெருமானே, திருப்பெருந்துறை உறை மன்னனே, சிவானந்தம் என்பது பழத்தின் சுவை போன்றது, அமுதத்தைப் போன்றது. அது அறிவதற்கு அரியது என சிவனடியார்கள் கூறுகிறார்கள்.

சிவானந்தத்தை இதுதான் என்று காட்ட முடியாது. அதை அனுபவித்து, உணரத்தான் முடியும். ஆனால் எங்களது பரம்பொருளாகிய உன்னை நீ இப்படித்தான் இருப்பாய், இதுதான் நீ என்று சொல்லும் அளவுக்கு அதை எங்களுக்கு உணர்த்தினாய்.

அப்படி நீ உணர்த்துவதற்கு உரிய வகையில், உன்னை உணரும் வகையில், உன் கட்டளைப்படி நாங்கள் நடக்கிறோம். எழுந்து வா பெருமானே என்று திருப்பள்ளி எழுச்சி பாடி அழைக்கிறார் மாணிக்கவாசகர்.

மேலும் படிக்க : பிரதோஷகால ஈஸ்வர தியானம் மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *