திருப்பாவை திருவெம்பாவை 10 ஆம் நாள் பாடல்
திருப்பாவை, திருவெம்பாவை பத்தாம் நாள் இன்று, சிவபெருமான் மற்றும் வைகுந்த நாதர் விஷ்ணுவின் அருள் ஒரு சேர கிடைக்க நாம் இருக்க வேண்டிய முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். அது பாவை நோன்பு ஆகும்.
திருப்பாவை 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!
பொருள்: விரதமிருந்து சொர்க்கத்திற்கு போகும் அம்மையே, நாங்கள் பலமுறை கூப்பிட்டும் கதவைத்தான் திறக்க மறுக்கிறாய், பதில் மொழி கூடவா கூறக் கூடாது..?
புண்ணிய மூர்த்தியாகிய ராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்து விட்டானோ?
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளே! பெறர்கரிய ஆபரணம் போன்றவளே! வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் அணிந்துள்ள நாராயண மூர்த்தி நம் நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்குவான். எனவே உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திறடி.
திருவெம்பாவை
பாதாளம் ஏழினும் கீழ் சொல்கழிவு பாதமலர்
போது ஆர் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே!
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழ்ன் தொண்டர் உளன்
கோதுஇல் குலத்துஅரன் கோயில் பிணாப்பிள்ளைகாள்!
ஏதுஅவன் ஊர் ஏதுஅவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதுஅவனைப் பாடும் பரிசு ஏலோர் எம்பாவாய்!
பொருள்:
சிவபெருமானின் குளத்தில் பிறப்பெடுத்த கோவிலுக்குள் பணியாற்றும் பெண்டிர் திருவண்ணாமலை லிங்கோத்பவர் அடிமுடி அறிய ஆதி அந்தமில்லாத திருவடி மலர் பாதங்கள் கொண்டவர். சிவபெருமான் அவரது பாதங்கள் ஏழுக்கும் கடந்து இருக்கின்றன அவர் அணிந்து கொண்ட ஊமத்தை, கொறை வானுலகம் கடந்து கொண்டே போகும். ஆம் அவை மேலுலகம் தாண்டி நிற்கின்றன. இத்தகைய மாபெரும் மன்னனான சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்கும் எல்லை இல்லாமல் இருப்பவர் அவரைப் பாடும் தன்மை என்றுமே சிறப்புடையதாகும்.