திருப்பாவை, திருவெம்பாவை 6 ஆம் நாள்
திருப்பாவை, திருவெம்பாவை ஆம் நாள் பாடல்கள் இறைவனை பக்தியுடன் பாட வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது. ஆண்டாள் திருமாலை நோக்கிப்பாடி பெண்களை எழுப்புகின்றார். மானிக்கவாசகர் பெண்ணாகத் தன்னை உருவப்படுத்தி பக்தி செய்கின்றார்.
6. திருப்பாவை
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
பொருள்:
பெண்ணுக்கு காலை வந்துவிட்டது. அதிகாலைக்கான பெண்ணே பறவைகள் எழுப்பத் தொடங்கிவிட்டது. பறவைகளின் அரசன் கருடன் முழங்கும் வெண்சங்கு ஓசை கேட்டுமா தூங்குகிறாய் என பெண்ணை எழுப்பும் பாடல் நம்மை பாவை நோன்பு உணர வைக்கின்றது.
கணண்ன் பூதகையையான சகடாசுரனை வதைத்தவர் பார்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் அவர் உலகின் உயர்வானவர். இறைவன் மீது தங்கள் பக்தி செலுத்தி முனிவர்கள் யோகிகள் அவரை மனதார ஹரி ஹரி என மனதில் ஜெபித்து ஓதும் ஒலி கேட்கவில்லையா ஹரி நாமம் குளிரை உண்டாக்கி நம்மை எழ வைக்கின்றது. உறக்கத்திலிருந்து எழுந்து வா
6. திருவெம்பாவை
மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும் வானவார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேல் ஓர் எம்பாவாய்!
பொருள்:
மான் விழிகள் கொண்ட பெண்ணே, நாளை நான் வந்து எழுப்புவேன் என்றேனே, இருந்து நீ ஞானமின்றி தூங்கலாமா பொழுது விடிந்தது தெரியவில்லயா எம்பெருமானினின் புகழ்பாடினால் இறை நம்மை வந்து ஆட்கொள்வார். இறைவனை மனமுருகிப் பாடி திறந்து பேசிப் பாடிவா சிவப்பெருமானை ஆட்கொள்ளலாம்.