குரூப் 2 தேர்வுக்கான திருக்குறளுடன் மொழிப்பாட குறிப்புகள் படியுங்கள்!
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வான குரூப் 2 தேர்வுக்கு படிக்கும் பொழுது மொழி பாடத்தை தினமும் பயிற்சி செய்யுங்கள் படியுங்கள் தேர்வை வெற்றி பெற படிப்பு, பயிற்சியுடன் பரிட்சை முறைகளை பின்ப்பற்ற வேண்டும். தொடர்ந்து படித்தவற்றை திரும்பி படிக்கும் பொழுது சில நுணுக்கங்கள் வலிமையாக மனதில் படியும். அதனால் அதிக மதிபெண்கள் எளிதில் பெறலாம்.
திருக்குறள் செய்யுளினை 6 முதல் 10 வகுப்பு தேவைப்பட்டால் 12 வகுப்பு பாடம் வரை திருக்குறள் செய்யுளினை மனப்பாடம் செய்து கொண்டு அது சார்ந்த இலக்கண குறிப்புகளை பயிற்சி செய்யும் பொழுது எந்த கேள்வியாயினும் பதிலளிக்க முடியும்.
திருக்குறள் பகுதி குறிப்புகள் இங்கு சிலேட்குச்சி வழங்கியுள்ளது படியுங்க தேர்வை வெல்லுங்க.
திருவள்ளுவரின் காலம் கி.மு-31ஆகும். திருவள்ளுவ ஆண்டு கணக்கிடும் முறையானது. நடப்பாண்டுடன் 31 கூட்டும் பொழுது திருவள்ளுவ ஆண்டினை பெறலாம்.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்து பால் என்னும் மூன்று பால்கள் கொண்டது.
திருக்குறள் உலக பொதுமறை என அழைக்கப்படும். மொத்தம் 107 மொழிகளில் மொழிப்பெயர்பு செய்யப்பட்டுள்ள தமிழ்நூல் திருக்குறள் ஆகும்.
திருக்குறள் பதிணென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றானது திருக்குறள் ஆகும்.
திருவள்ளுவரை செந்நப்புலவர், தெய்வபுலவர், நாயனார் எனறு அழைக்கப்படுகின்றார்.
திருக்குறள் குறித்து கருத்து: வள்ளூவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு என்று பாரதியார் பாடுகின்றார்.
வள்ளூவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என பாரதிதாசன் கூறுகின்றார்.
திருக்குறளின் வளமை அது தரும் செழிமையை அறிந்து இலத்தீண் மொழியில் வீரமாமுனிவர் பெயர்த்தார்.
இங்கிலாந்து நாட்டில் திருக்குறள் விவிலியத்துடன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் பாதுகாக்கப்படுகின்றது.
திருக்குறள் வெண்பாக்காலால் ஆனது ஆகும்.திருக்குறளில் முப்பால் என்பது அறம் பொருள் இன்பம் குறிப்பவையாகும்.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு. போப் ஆகும்.
திருவள்ளுவமாலை உரை நடையில் திருக்குறளின் பெருமையை கூறும்.
எண் என்ப ஏனை எழுதென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்குஉவப்ப தலைக்கூடி உள்ள்பிரிதல் அன்னைதே புலவர் தொழில் இவ்வாறு ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு வாழ்க்கை பாடம் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஏழுசீர்களை கொண்ட ஈரடி வெண்பாக்கலால் ஆன நூல் திருக்குறள் ஆகும்.
திருக்குறளின் அறத்துப்பால் 33 அதிகாரங்களும் பொருட்பால் மொத்தம் 70 அதிகாரங்களும், இன்பத்து பால் 25 அதிகாரங்களை கொண்டது.
திருக்குறளுக்கு இதுவரை 10 பேர் உரை எழுதியுள்ளனர். அவர்களின் பெயர்கள் கிழே கொடுத்துள்ளோம். தருமர், மணக்குடவர், தாமதத்தர், தச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பரிமேலழகரின் உரை சிறந்தது ஆகும்.
திருக்குறலின் உடைமை என்னும் பெயரில் 10 அதிகாரங்கள் எண்ணிக்கை வரும்.
விக்டோரிய மகாராணி காலையில் முதன் முதலில் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள் ஆகும்.
திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்கள் மற்றும் 1330 குறள்களை கொண்டது அதிகாரத்திற்கு பத்து பாட்டு என வழங்கப் பெற்றது.
இவ்வாறு திருக்குறள் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. அடுத்த பதிவில் மீண்டும் முக்கிய குறிப்புகளை பதிவிடுகின்றோம்.