வாழ்க்கை முறைவாழ்வியல்

வீட்டிலிருந்தே வேலை பார்க்கிற கவலையா டென்ஷனை விடுங்க

உலகளவில் பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் கொரோனாவின் தீவிர பரவலால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வற்புறுத்துகிறது. வீட்டில் இருந்து வேலை செய்வது உற்சாகமாக இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு சலிப்பை ஏற்படுத்தி விடும். பணியிடத்தில் நண்பர்கள் சூழ்ந்து இருப்பார்கள்.

அப்போது இடைவேளை கிடைக்கும். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் இருந்து வேலை செய்யும் போது இவை அனைத்தையும் இழக்கின்றோம். எனவே இவற்றை சரிசெய்ய நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வது மிக அவசியம். காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, கடவுளை வணங்கி விட்டு, காலை உணவை சாப்பிட்டு பிறகு, மன புத்துணர்வுடன் வேலையைத் தொடங்க வேண்டும். இதனால் தூக்கம் வராது.

Female student checking her computer

வீட்டில் தான் இருக்கிறோம் என்பதற்காக காலை எழுந்தவுடனே கம்ப்யூட்டர் முன் உட்கார வேண்டியதில்லை. இது உடலை சோர்வாகவும், தூக்க களைப்புடன் இருக்கும். அன்றாட தனிப்பட்ட வழக்கத்தை பின்பற்றுவதை விட்டு விடாதீர்கள். படுக்கையில் படுத்துக்கொண்டு வேலை பார்க்காமல் உங்களுக்கென்று தனி நாற்காலி வைத்துக்கொண்டு அதில் அமர்ந்து, சவுகரியமான நாற்காலியில் அமர்ந்து ஜாலியாக வேலை பார்க்கலாம்.

அப்பபொழுது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். டீ டைம், லஞ்ச் டைம் மற்றும் நாற்காலியில் இருந்து 5 முதல் 10 நிமிடம் ஓய்வு கொடுங்கள். வீட்டிலிருந்து ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தால் மூளைக்கு ஓய்வு தேவை. எனவே சிறிது நேரம் நடந்தால், மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். காலை பணியில் அமர்வதற்கு முன்பாக தினமும் எவ்வளவு மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு அமருங்கள்.

அலுவலக நேரம் விதித்திருக்கும் அந்த நேரத்திற்குள் அலுவலக பணிகளை முடித்துவிட்டு உங்களுடைய நாற்காலியை விட்டு எழுந்து விடலாம். அலுவலகத்தில் நமக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற உணர்வு உருவாகும். அந்த இடத்திற்கு போகும் போது உங்கள் மனம் தன்னாலே வேலை செய்ய போகிறீர்கள் என்று ஒத்துக்கொள்ளும். வீட்டில் இருக்கும் போதும் அதே மாதிரியான சௌகரியமான ஒரு இடத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கிறோம் என்ற உணர்வை மறந்து வேலையில் இருக்கிறோம் என்று உணர வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *