சகுண சாஸ்திரங்கள் சொல்லும் குறிப்புகள்
கடவுள் ஏதோ ஒரு ரூபம் வழியாக ஆபத்து வருகின்ற காலங்களில் சகுனம் மூலமாக உணர்த்துவது உண்டு என்று கூறுகிறது சகுன சாஸ்திரம். பழமொழிக்கு ஏற்ப தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றன, ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியுள்ளார் கடவுள் என்பது தான் பொருள். நாம் செய்கின்ற கர்மவினைகள் படி இவை நடக்கும். கர்மத்தின் புண்ணியம் காரணமாக நல்ல பலனை பெறுவதற்கு சகுனம் மூலம் நம்மை காக்கும்.
நம் சொந்தத்தில் அல்லது வீட்டிலோ யாராவது இறந்து விட்டது போன்ற கனவு வந்தால் நல்ல சகுனம். இதனால் சொந்தத்தில் திருமணம் நடந்தேறும் என்பதைக் குறிக்கும். வளர்ப்பு பிராணிகள் பசு, நாய், பூனை, கண்ணுக்குட்டி கனவில் வருவது எச்சரிக்கையை குறிப்பதாகும். மருத்துவ செலவுகளும், வீண் விரயங்களும் ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறிகள்.
கர்ம வினை காரணமாக எந்த ஒரு உணர்வையும் ஏற்படுத்தாமல் ஆபத்து வருவதும் உண்டு. ஆபத்தில் இருந்து தப்பிப்பதற்கு முன்பாகவே நல்வழியை சகுன மூலமாக காட்டுவது. நீங்கள் செய்த கர்ம வினை மூலமாக கடவுள் உணர்த்துகிறார்.
காய்கறிகள், கீரைகள் கனவில் வருவதால் சொர்க்கலோக வாசம் செய்வதைக் குறிக்கும். பந்தல் போல படரக் கூடிய கொடி வகை காய்கறிகளை கனவில் காணக்கூடாது. ஒரு சில கனவுகள் நம்மை பயமுறுத்தும். இப்படி பயத்தை நீக்கக்கூடிய சக்திவாய்ந்த கால பைரவரை வழிபடுவது சிறப்பு.
ஒருவர் இறக்கும் தருவாயில் முன்னதாகவே அவர்களுக்கு எமதர்மராஜா அறிகுறிகள் காட்டுவார் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. பாம்பு கடிப்பது மாடு முட்டுவது முன்னோர்கள் வந்து அழைப்பது போன்ற அபசகுனமான கனவுகளை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க : வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெற ஆடி செவ்வாயில் இதை செய்ய மறவாதீர்கள்
வீட்டில் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கும்போது பல்லி சத்தம் போட்டால் வெற்றி அடையும். பேசிக் கொண்டிருக்கும் விஷயம் வெற்றியாக அமையும் என்பதற்கான பலன். அதேபோன்று பல்லி தொடர்ந்து சத்தம் போடுவது நல்ல சகுனம் இல்லை. நாம் ஏதாவது நினைத்துக் கொண்டிருக்கும்போது கோயில்களிலோ, வீட்டிலோ பல்லி தொடர்ந்து சத்தமிட்டால் தடை என்பதை குறிக்கிறது. வேண்டிய பிரார்த்தனையில் அல்லது சில விஷயங்கள் நடைபெற சிக்கல்கள் உள்ளன என்பதற்கான அறிகுறிகள்.
மேலும் படிக்க ; பழமுதிர்சோலை ஆறாம் படை வீடு