வாழ்க்கை முறைவாழ்வியல்

குமட்டல்,பசியின்மை, குறட்டையா? கவனிங்க

நம் அன்றாட நேரங்களில் ஒரு சில விஷயங்களை கவனிக்க தவறலாம். இதை சரியாக பாலோ செய்தாலே போதுமானது. இங்கு உங்களுக்கான பொதுவான குறிப்புகள் கொடுத்துள்ளோம். பொதுக் குறிப்புகள் எப்போதும் தூங்குவதற்கு முன்பு தூக்க மாத்திரைகளை உபயோகிக்க பழகாதீர்கள். மாத்திரைகளை விழுங்குவதற்கு சிரமமாக இருந்தால் அதன் மேல் சிறிதளவு வெண்ணெயை தடவினால் சிரமமின்றி விழுங்க முடியும். குறட்டையை தவிர்ப்பதற்கு ஒருக்களித்துப் படுத்து கழுத்தை நேராக வைத்து தூங்கலாம்.

  • மாத்திரைகளை விழுங்குவதற்கு சிரமமா?
  • குறட்டையை தவிர்ப்பதற்கு?
  • அதிகாலை எழுந்தவுடன் குமட்டல் உணர்வா?

அதிகாலை குமட்டல் உணர்வா

படுக்கைக்கு செல்லும் முன்பு மது மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க வேண்டும். தோல் வரட்சி உள்ளவர்கள் குளிக்கும் பொழுது தண்ணீருடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து குளிக்கலாம். சிலருக்கு அதிகாலை எழுந்தவுடன் குமட்டல் உணர்வு இருக்கும். இதை சரிசெய்ய எழுந்தவுடன் பால் அல்லது தண்ணீர் குடிக்க வேண்டும். இதற்காக எந்த மருந்தும் எடுக்கத் தேவையில்லை.

பாதங்களுக்கு மசாஜ்

ஆப்பிள் சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கிறது. தலைவலி பித்தப்பை கோளாறுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிகம் பால் சுரக்க சாப்பிடலாம். வெளியில் வாங்கும் ஜூஸ் பாட்டில்களை தூக்கி எறியாமல் இளஞ்சூடு தண்ணீர் நிரப்பி பாதங்களுக்கு மசாஜ் செய்யப் பயன்படுத்தலாம்.

பசியின்மையை போக்க

பசியின்மையை போக்க நறுக்கிய இஞ்சியுடன், கருப்பு உப்பு சேர்த்து சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்ளலாம். இதை பத்து நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். புகைக்கு அடிமையானவர்கள் தினமும் 10 துளசி இலைகளுடன், தேனை கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருளான கார்பன் டெட்ரா குளோரைடு குறைக்கச் செய்யும்.

பேச்சு குறையை போக்க

குழந்தைகளுக்கு திக்குவாய் மற்றும் பேச்சு குறையை போக்க பேச்சு தெளிவு வரும் வரை ஒரு நெல்லிக்காயை தினமும் மென்று சாப்பிடக் கொடுக்க வேண்டும். வாரத்தில் இரண்டு முறை மிளகை வாயில் போட்டு கடித்து அதை சிறிது நேரம் சப்பி சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *