வாழ்வில் ஒரு முறையாவது திருவோண விரதம் இருங்க.!
ஆன்மீகத் தகவலில் திருவோண விரதம் இருப்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். திருவோணம் என்பது ஒரு நட்சத்திரம் ஆகும். 27 நட்சத்திரங்களில் திருவோண நட்சத்திரம் பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரம் நட்சத்திரம். திருவோண நட்சத்திரம் மஹாவிஷ்ணுவின் நட்சத்திரம் ஆகும்.
வைகாசியில் வருகின்ற 10/06/2020 புதன்கிழமை இந்த திருவோண விரதம் வருகிறது. ஆவணி மாதத்தில் வருகின்ற இந்த திருவோண விரதமானது கேரளாவில் உள்ள அனைத்து பெண்களும் வழிபடக் கூடிய முக்கிய விரதம் இந்த திருவோண விரதம். இது ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற இந்த திருவோண விரதத்தை மேற்கொள்ள இயலாதவர்கள் , ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற திருவோண விரதத்தை மட்டுமாவது அனுஷ்டிக்க வேண்டும்.
திருவோண விரதம்
வாழ்வில் இருக்க வேண்டிய முக்கியமான விரத நாட்களில் இந்த திருவோண விரதமும் ஒன்றாகும். இந்த விரதத்தை எப்படி மேற்கொள்ளலாம். திருவோண விரதம் அன்று காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, அன்றைய நாள் முழுவதும் உப்பில்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காலை ஒரு வேளை விரதமிருந்து மதிய உணவு, உணவில் உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். மாலை சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் மகாவிஷ்ணுவின் நாமங்களை உச்சரிக்க வேண்டும்.
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் ஸ்ரீ ஹரி நமோ நாராயணா
என்ற இந்த விஷ்ணுவின் மந்திரத்தை உச்சரித்தபடி இருக்க வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் மகாலட்சுமியின் பூரண அருளைப் பெறுவார்கள். வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்றுத் தர, இந்த திருவோண விரதத்தை ஒவ்வொருவரும் முடிந்தது ஒரு முறையாவது இருக்க வேண்டும். பகவான் விஷ்ணுவின் அருளைப் பெற இந்த விரதத்தை கடைபிடியுங்கள்.
பெருமாள் பல அவதாரங்கள் கொண்டவர். பெருமாளை கும்பிடுவதால் சாந்த குணம் கிடைக்கும். நமக்கு வேண்டிய நேரத்தில் வேண்டியதை, சரியான நேரத்திற்கு கொடுக்கக் கூடிய கடவுள் பகவான் விஷ்ணு. இந்த திருவோண நட்சத்திரத்தில் பகவானுக்கு உங்களால் முடிந்த நைவேத்தியங்களை வைத்து வழிபடலாம்.
பால், வெண்ணை, கோதுமை ரவை கேசரி, ஏலக்காய் மாலை அல்லது சிறிது ஏலக்காய் படத்தின் முன்பு வைத்து வழிபடலாம். இதில் ஏதாவது ஒரு நைவேத்தியத்தை பகவான் விஷ்ணுவிற்கு படைக்க வேண்டும். முடிந்தவர்கள் விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வது சிறப்பு அன்றைய தினம் விரதம் இருக்க முடியாதவர்கள் மனதளவில் விஷ்ணு பகவானை நினைத்து பிரார்த்தனை செய்யலாம்.
மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். புதன்கிழமையும், திருவோண விரதமும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமான ஒன்று. பொதுவாக புதன்கிழமை அன்று பெருமாளை வழிபடுவது உகந்தது. இந்த முறை திருவோண விரதம், புதன்கிழமையும் சேர்ந்து வருவதால் இதை தவற விடாமல் இந்த திருவோண விரதத்தை மேற்கொள்ளலாம்.