டிஎன்பிஎஸ்சி

போட்டித் தேர்வுக்கான மொழிப்பாடக் குறிப்புகள்!

போட்டி தேர்வுகளுக்கான மொழிப்பாடத்தில் உள்ள இலக்கண விதிகள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.  முறையான இலக்கண அறிவு மொழியில் ஏற்படும் தவறுகளை தவிர்க்கும். மொழியின் ஆதாரமே இலக்கணம் ஆகும். இதன் விதுமுறைகள் நினைவில் இருந்தால் மொழியில் ஏற்படும் தவறுகளை எளிதில் அறியலாம். புதிதான வார்த்தைகளை அமைத்து வாக்கியமாக்கலாம். அப்பதிப்பினை இங்கு கொடுத்துள்ளோம்.
தமிழ் இலக்கணம்: இலக்கு+அணம், அணம் என்றால் உயர்ந்தது. 
மொழியின் உயர்ந்த குறிக்கோள்களைக் கூறுவது  இலக்கணம் ஆகும்.  இலக்கணம்  ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும்  பயன்படுகின்றது. 

இலக்கணத்தை ஐந்து வகையாகப் பிரிப்பர்எழுத்திலக்கணம் சொல்லிக்கணம்பொருளிலக்கணம் யாப்பிலக்கணம் அணியிலக்கணம் 
தொல்காப்பியர் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள்,  என்று மூன்றாகப் பிரித்தார். 
 

ஒருமை: ஒருமை என்றால் ஒன்று மட்டும் குறிக்கும். ஒருமையைல் தொடங்கும் ஒரு  தொடரின் முடிவு ஒருமைதான் முடிய வேண்டும். 
பன்மை: பன்மை என்பது ஒன்றிற்கு மேற்ப்பட்டவையைக் குறிக்கும். 
பன்மையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு பன்மையில்தான் முடியும். 
மரங்கள் சாய்ந்தன, கருவிகள் பழுந்தடைந்தன  போன்றவற்றை குறிப்பிடலாம். 

மரபுத் தொடர்புகளை வாக்கியத்தில் அமைக்கலாம்: 

அவலை நினைத்து உரலை இடித்தல்- ஒன்றை எண்ணி மற்றொன்றை செய்தலை குறிக்கும். 
எடுப்பார் கைப்பிள்ளை- யார் சொன்னாலும் அதைக் கேட்டு நடப்பவன்
ஓலை வந்து விட்டது- ஆணை கிடைத்துவிட்டத்து
சீட்டுகிழிந்துவிட்டத்து- வேலை போய்விட்டது. 
பஞ்சாய்ப் பறக்கிறான்- பொருளின்றி அலைகிறான் 
கங்கு கரையில்லை- எல்லை இல்லை
கொடி கட்டிப்பறத்தல் – தனிப்புகழோடு வாழ்தல் 
கோயில் பெருச்சாலி- பொது சொத்தை திருடித் தின்பவன் 
சங்கப் பலகை- விரிந்து அனைவருக்கும் இடம் கொடுக்கலாம். 
புத்தகப் பூச்சி – உலக அறிவின்றி நூலறிவு மட்டுமே உள்ளவன் 
மதில் மேல் பூனை – நிச்சயம் இல்லாத நிலை
மலையேறிவிட்டது- பழைய  பழக்கம் மறைந்துவிட்டது
மனப்பால் குடித்தல் பழைய பழக்கம் மறைந்துவிட்டது. 
மனப்பால் குடித்தல் – கற்பனை செய்தல்  முதலைக் கண்ணீர்- பொய் அழகை, ஏமாற்றுதல் 

புணரச்சி: 

இயல்புப் புணர்ச்சி என்பது நிலை மொழியோ, வருமொழியோ மாறமல் புணர்ந்திருப்பது இயல்பு புணர்ச்சி என்கின்றோம். 
மலர்+ மாலை= மலர்மாலைபனை+ மரம்= பனைமரம் 
நிலைமொழி இறுதியில் உள்ள மெய்எழுத்து வருமொழி முதல் எழுத்தான உயிர் எழுத்து சேர்ந்து  உயிர்மெய்யாகி புணர்வதும் இயல்பு புணர்ச்சி ஆகும். 
கடல்+அலை=கடலலை

விகாரம்:சிலவகை மாற்றங்களை கொண்ட சொற்கள் விகாரப்புணர்ச்சி எனலாம், நிலைமொழி மற்றும் வருமொழியாகிய இரு சொற்கள் புணரும் பொழுது சில மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றங்களை விகாரம் என அழைக்கப்படும். 
நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் ஒரு புதிய எழுத்து தோன்றால்ம். 
நிலைமொழி ஈற்றில் ஒரெழுத்து மற்றோர் எழுத்தாகத் திரியலாம். 
நிலைமொழியின் ஈற்று வருமொழியின் முதலிலுள்ள எழுத்துக்கள் வேறுபட்டுத் திரிந்து விடலாம். ஓரெழுத்து கெடலாம். இதனை விகாரப் புணர்ச்சி என்பர். 
மா+காய்+ மாங்காய் வாழை+பழம்=வாழைப்பழம் 
திரிதல் விகாரம்பல்+பொடி+ பற்பொடி நிலைமொழி ஈற்று  ல்,ற் ஆனது
கல்+ தூண்+ கற்றூண்  நிலைமொழி ஈற்று ‘ல்’ எழுத்து ‘ற்ற்’ ஆனது 

கெடுதல் விகாரம்:நிலைமொழியும் வருமொழியும் அமையும் சொற்களில் முதலும் இறுதியும் மையும் . எழுத்துக்களை அறிதல் தேவை இவ்வெழுத்துக்களை உயிர் எனவும் மெய் எனவும் குறிப்பிடுவர். 
கெடுதல் விகாரம் உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு சொற்கள் அமையும் சொற்களை உயிர் முதல் சொற்கள் என்பார்கள். 
சொற்களின் ஈற்றிலுள்ள எழுத்துகளில்  உயிர்மெய்யாக இருக்கும் ஆனால் முதலில் மெய்யும் பின் உயிர் அமைந்து நிற்கும் எழுத்துக்கள் அமையும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *