டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தமிழ்ப் பாட குறிப்புகள்!

தமிழ் மொழியில் உள்ள தமிழ்நூல்கள் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். அவை ஒவ்வொன்றும்  தனித்திறமை வாய்ந்தது ஆகும். ஆகையால்  அடைமொழியால் குறிக்கப்படுகின்றன.  அத்தகைய நூல்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும். 

அகவல் காப்பியம்,  கொங்குவேள் மாக்கதை – பெருங்கதை
இசைப்பாட்டு – பரிபாடல் , கலித்தொகை
இயற்கை இன்ப வாழ்வு நிலையம்- சிலப்பதிகாரம்
இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு 
இரட்டை காப்பியங்கள் – சிலப்பதிகாரம் , மணிமேகலை
உழத்துப்பாட்டு – பள்ளு

கம்பர் த நூலுக்கு இட்டப் பெயர் – ராமாவதாரம் 
கற்றறிந்தோர் ஏற்கும் நூல் -கலித்தொகை
கிறிஸ்த்துவர்களின் களஞ்சியம்- தேம்பாவணி 
குட்டி திருவாசகம்- திருக்கருவை பதிற்றுப் பத்தாந்தாதி
குட்டி தொல்காப்பியம்- தொன்னூல் விளக்கம் 
குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ்
குறத்திப் பாட்டு குறம், குறவஞ்சி நாட்கம்- குற்றாலக் குறவஞ்சி 

காப்பியம்

சின்னூல் என்பது- நேமிநாதம் 
செந்தமிழ்க்காப்பியம் , முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய  காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமை காப்பியம், புரட்சிக் காப்பியம், உரைநடை யிட்ட பாட்டுடைச் செய்யுள், சிலம்பு , சிறப்பு அதிகாரம் – சிலப்பதிகாரம் 

தமிழ் வேதம்

தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வநூல், உலக்ப்பொதுமறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யாமொழி, ஈறடி வெண்பா இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயர்நிலை – திருக்குறள் 
தமிழ்மொழியின் உபநிடதங்கள் – தாயுமானவர் பாடல்கள்
தமிழ் வேதம் – நாலாயிர திவ்ய பிரபந்தம் 

தமிழர்  வேதம்- திருமந்திரம் 
தமிழர்களின் கருவூலம் – புறநானூறு 
தமிழரின் இரு கண்கள் – தொல்காப்பியம் திருக்குறள்
தமிழ் வேதம் , சைவ வேதம், தெய்வத்தன்மை  கொண்ட அழகிய  வாய்மொழி- திருவாசகம் 
தமிழின் முதற்கலம்பகம்- நந்தி கலம்பகம் 
திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் – திருவள்ளுவ மாலை

திருத்தொண்டர் புராணம் , வழிநூல், திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம்- பெரிய புராணம்
தூதின் இலக்கணம் -இலக்கண விளக்கம் 
நட்புக்கு கரும்பை உவமையாக பாடப்பெற்ற நூல் – நாலடியார்
நெடுந்தொகை – அகநானூறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *