சுற்றுலா

ட்ரிப் போறிங்களா.. அப்ப இதெல்லாம் படிசுட்டு போங்க..!!

நம் வீட்டு இளவரசி/இளவரசர்களுக்கு ஒவ்வொரு முறையும் பள்ளி தேர்வுகள் முடிந்து விடுமுறை விட்டா போதும். தேர்வுக்கு முன்னரே, எங்கெல்லாம் போகணும், என்னெல்லாம் பர்ச்சஸ் பண்ணனும்னு, போடற லிஸ்ட் இருக்கே. இந்த காலத்து பிள்ளைகள் ரொம்பவும் உசார் என்றே சொல்லலாம். அப்படி இருக்க அந்த ட்ரிப் நல்ல விதமா அமைச்சுக்க நம்ம என்னென்ன செய்யணும். வாங்க தெருஞ்சுப்போம். 

ட்ரிப் அல்லது ஊருக்கு எங்க போறதாக இருந்தாலும், நாம பாதுகாப்பாக போய் வரணும் என்று தான் நினைப்போம். அதற்கு நாமும் சில வேலைகளை கரெக்டா இருக்கானு ஒன்ஸ் பார்த்துக்கணும். நீங்க போற ட்ரிப் பயணம் குடும்பத்துடனா அல்லது நண்பருடனா, அண்டை வீட்டாருடனா எப்படி பட்ட பயணமாக இருந்தாலும், இதெல்லாம் பாலோவ் பண்ணுங்க.

மேற்பார்வையில் இருக்கட்டும்

இன்றைய காலகட்டத்தில் நாம் போகும் பயணம் எந்த வித படபடப்பும், டென்ஷன் இல்லாமலும் பார்த்துகனும். நீங்கள் போவது தனிப்பட்டதாக இருந்தால் பஸ், ட்ரெயின், கார் எதுல போனாலும் நீங்க பாதுகாப்பாக இருப்பதை உறுதி படுத்திக்கோங்க. டிக்கெட்ஸ், வாகன புரூப் அனைத்தும் எடுத்து வைத்து கொள்ளுங்க. யாரையும் நம்பி உங்க லக்கேஜ் ஒப்படைக்காதீர்கள். உங்கள் மேற்பார்வையில் இருக்கட்டும். 

நீங்கள் செல்வது காராக இருக்கும் பட்ஜத்தில் உள்ளே உக்கார்ந்ததும் டோர் லாக் செக் பண்ணிக்கோங்க. உங்கள் வாகனத்தில் திருட்டு தவிர்ப்பிர்க்கான எச்சரிக்கை ஒலி எழுப்பக்கூடிய கருவிகள் பொறுத்த பட்டிருந்தால் தக்க சமயத்தில் உங்கள் வாகனத்தின் மீது கவனம் ஈர்க்கப்படும். இதனால் வாகனம் திருட்டு போவது தவிர்க்கப்படும். இதன்  விலையானது உங்கள் வாகன காப்பீடு தொகையை விட குறைவுதாங்க. 

வாகனத்தை நிறுத்திவிட்டு போகும் போது வாகன கதவு ஜன்னலை எப்போதும் மூடி வைங்க. இதனால் திருடர்கள் திறந்திருக்கும் கதவு வழியே ஊடக கம்பி நுழைத்து கதவின் பிடியை அகற்றி திறக்க முயற்சிப்பது தவிர்க்கலாம். வாகன கதவை சரியாக மூடாமல் போனால் நீங்களே திருடனுக்கு அழைப்பு விட்ட கதையாகிவிடும். எப்போதும் அவசரமாக செல்லாதீர்கள். ஒரு இடத்திற்கு போக வேண்டுமானால் அரை மணி நேரம் முன்னாடி போவதால் இந்த மாறி தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளலாம்.

வாகன திருட்டு குறையும்

வாகனத்தில் விலை உயர்ந்த பொருட்களை வைத்து விட்டு போகாமல் கையிலேயே எடுத்து செல்லுங்கள். இந்த மாதிரியான பொருட்கள் இருப்பதை பார்க்கும் போது திருடர்கள் கண்ணாடியை உடைத்து திருட திருடர்களை தூண்டும். எனவே இந்த மாதிரியான வாகன தொலைபேசி , கோட்டுகள், கைப்பை, சிறுபுத்தகம், பரிசுபொருட்கள், வைத்து செல்லாதிங்க. இதெல்லாம் சரியாக கடைபிடிப்பதால் வாகன திருட்டு குறையும்.

நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியாக செல்லலாம், என்பதை முன்னரே ஒரு தடவை திட்டமிட்டோ, அல்லது கூகுளை பார்த்து வழித்தடத்தை அறிந்து கொள்வதாலும் போக வேண்டிய இடத்திற்கு சரியாக குறித்த நேரத்தில் நீங்கள்  போய்  சேர முடியும். மேலும் இந்த மாதிரியான பாதுகாப்பு பற்றி தொடர்ந்து படிங்க, அடுத்த பதிவிலும் பகிர்கிறேன்.

மேலும் படிக்க

அசைவ முறையில் காலிபிளவர் கிரேவி செய்து அசத்துங்க..!!

லாங் ட்ரிப் போறிங்ளா அப்ப இத படிசுட்டு போங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *