டிஎன்பிஎஸ்சி

அறிவியல் மற்றும் அரசியலமைப்பு குறிப்புகளை கொண்ட பொது அறிவுப் பகுதியை படியுங்கள் தேர்வர்களே!

நீரின்சேர்க்கை என்பது  சிலிகேட் தாதுக்களை பாதிப்படையச் செய்யும் செயலாகும். ஹைட்டிரஜன் மற்றும் ஹைட்ராக்சைடு அயனிகளால் சிலிக்கேட்டுகள் களிமண் தாதுக்களாக மாற்றப்படுகின்றன. 
ஆறு என்பது ஓடும் நீராகும், வழக்கமாக நன்னீர் உயர் நிலப் பகுதிகளில் உருவாகி ஆறு ஏரி, கடல் அல்லது பேரழியினை நோக்கிப் பாய்கின்றது.

பொதுவாக மியாண்டர்கள் என்பது ஆற்றின் வளைந்து செல்லும் பாதைகளிலுள்ள ஒரு வளைவாகும். 
வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும் வளிமண்டலத்தின் நிலையாகும். வெப்பம், காற்றழுத்தம், ஈரப்பதம், மழையளவு, மேகமூட்டம், காற்றின் வேகம் மற்றும் அதன் திசை ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது. 

நிலக்கரி பல மில்லியன் வருடங்களாக உருவான கனிமம் ஆகும். ஆகவே புதை எரிபொருள்  எனப்படும். 
ஒழுங்கு முறை சட்டம் கம்பெனி ஆட்சிக்கு எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜென்ரல் வாரன்ஹேஸ்டிங்ஸ் ஆக இருந்தார். 
இந்தியாவில் உச்சநீதிமன்றம் கல்கத்தாவில் இருந்தது. 
வைசிராயின் நிர்வாக உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 முதல் 5 ஆக உயர்த்தப்பப்பட்டது. 

இந்திய விடுதலை மசோதா ஜூலை 4, 1947 ஆம் ஆண்டு பாராளுமறத்தில் கொண்டுவரப்பட்டது. 
இந்தியா அரசியல் நிர்ணயசபை கேபினர் தூதுக்குழுவின் பரிந்துரைப்படி மே 16, 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 
சி.ஏ முதல் சட்டம் டிசம்பர் 9, 1946 தற்காலிக தலைவர் சச்சிதானந்த சின்ஹா தலைமையில் நடைபெற்றது. 
பாராளுமன்ற முறையிலான அரசாங்கம் மத்தியிலும் மாநிலத்திலும்  அரசாங்ககங்கள் அமைய வழிவகை செய்கின்றது.  

மொழி வாரியாக மாநிலங்களை மாற்றியமைப்பது பற்றி ஆய்வு செய்ய 1947 நவம்பர்  மாதம் எஸ்.கே தார் கமிசனை அரசு நியமித்தது. 
தார் கமிஷன் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிப்பதை பரிந்துரை செய்தது ஆனால் காங்கிரஸ் அரசு நிராகரித்தது. 
ஜேவிபி கமிட்டி தார் கமிஷன் பரிந்துரைகளை பரிசீலினை நடைப்புறப்படுத்துவது பற்றி ஆய்வு செய்ய 1947 ஆம் ஆண்டு   நவம்பர் மாதம் எஸ்கே தார் கமிஷனை மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மாநில மறுசீரமைப்பு பிரச்சனையை முழுமையாக ஆய்வு செய்ய இந்திய அரசு திரு பாசல் அலி என்பவரின் தலைமையில் ஹிருதயநாத் குன்ஸ் -ரூ கே.எம் பனிக்கர் உட்பட மாநில மறுசீரமைப்பு ஆயுவுக் குழுவினை 1953 ஆம் ஆண்டு அமைத்தது. 

வகுப்புவாரி  முஸ்லீம்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நிலக்கிழார்கள், தோட்ட முதலாளிகள் முஸ்லீம்கள் என்ற சமூகம் ஊராட்சி மன்றங்கள் வணிக மன்றங்கள், பல்லைக்கழகங்கள் என்ற நிறுவனங்ககளுக்கு  தொகுதியாக  காட்சி அளித்தது.

1954 ஆம்  ஆண்டு பாண்டிச்சேரி பிரெஜ்சுகாரர்களிடமிருந்து பெறப்படட்து.1961 இல் கோவா, டையூ, டாமன், போர்ச்சுக்கீசியர்களிடம் இருந்து  பெறப்பட்டது.தாத்ரா நாகர்ஹேவேலியும் போர்ச்சுக்கீசியரிம் இருந்து பெறப்பட்டது. 1991  ஆம் ஆண்டு 70 வது திருத்தச் சட்டப்படி டெல்லி தேசிய தலைநகராக செயல்பட்டது.

1773 இல் ஒழுங்குமுறை சட்டத்தின்படி  மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா கவனர்கள்களை ஒரே தலைமையில் கீழ் கொண்டுவர இச்சட்டம் வகை செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *