ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறை

இதெல்லாம் உங்கள் பூஜை அறையில் செய்ரீங்களா..!!

பூஜை அறை குறிப்புகள் உங்கள் பூஜை அறையை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். தினமும் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும் என்பது இல்லை.உங்கள்  தினசரி வேலைகளை முடித்துவிட்டு, சிறிதுநேரம் ஒதுக்கி கடவுளுக்காக பூஜை செய்வதற்கு, வீட்டிலே பூஜை அறையை அமைத்து, நமக்கு விருப்பமான சாமி படங்களை வைத்து பூஜை செய்கிறோம். பூஜை அறை இல்லை என்பவர்கள், அதற்கு என்று ஒரு இடத்தை ஒதுக்கி, செல்ப்பில் படங்களை வைத்து அங்கேயும் பூஜை செய்யலாம்.

இந்த பூஜையை எப்படி எல்லாம் செய்ய வேண்டும். என்ன செய்தால் முழு பலனை தரும், என்பதை பற்றி பார்க்கலாம். வாரத்தில் வியாழன், பௌர்ணமி, முக்கிய விசேஷ தினங்கள், முதல் நாள் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு, சுத்தமாக துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, விளக்குகளை சுத்தம் செய்து அதற்கும் பொட்டு வைத்து சாமி ரூமை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூஜை செய்யும் போது

சாமி படங்களுக்கு தினமும் உங்களால் முடிந்த பூக்களை சாற்றுங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள். உங்களால் முடிந்த மந்திரங்களை சொல்லுங்கள். இதனால் வீட்டில் சுற்றி நேர்மறை எண்ணங்கள் தோன்றும். எல்லா சாமி படங்களும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களால் முடிந்த என்ன படங்கள் இருக்கிறதோ? அந்த படங்களுக்கு இதையெல்லாம் தினமும் செய்து வாருங்கள்.

முக்கியமான விசேஷ தினங்களுக்கு நெய்வேத்தியம் வைக்கவேண்டும். உங்கள் வசதிக்கு என்ன முடியுமோ? அதை நெய்வேத்தியம் ஆக வைக்கலாம். கல்கண்டு, பேரிச்சம்பழம், பொட்டுக்கடலை, நிலக்கடலை, அவல் பொரி, நிலக்கடலை மிட்டாய், உருண்டை வெல்லம். இது போன்ற ஏதோ ஒரு பொருட்கள் நீங்கள் வாங்கி வந்து இருப்பீங்க. அந்த அன்னைக்கு அந்த பொருளை சாமிக்கு வைத்து கும்பிட்டு எடுத்து நீங்க உபயோகப்படுத்தலாம்.

இதனால உங்கள் குடும்பம் மேன்மேலும் வளரும். குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். விளக்கு ஏற்றும் போது தினமும் விளக்கில் என்னை முழுவதுமாக ஊற்றி வைத்து தான் ஏற்ற வேண்டும். குறைந்தது அரை மணி நேரமாவது அந்த விளக்கை எரிய விடவும். விளக்கை அணைக்கும் போது ஓம் சாந்தி என்று சொல்லி பூவைக் கொண்டு அணைக்க வேண்டும்.

இப்படி வழிபடும்போது வீட்டிலேயே உங்கள் சாமி படங்களுக்கு முன்பு நின்று உங்களுக்கு என்ன தேவையோ அந்த வேண்டுதல்களை வைக்கலாம். என்ன பிரச்சனையோ, வேலைவாய்ப்பு, திருமணம் சம்பந்தமாக எது வேண்டுமானாலும் வீட்டிலேயே வேண்டிக் கொள்வதால் அது நமக்கு நிறைவேறும்.

மகாலட்சுமி வாசம் செய்ய

பூஜை அறை எப்பொழுதும் கமகமக்கும் வாசனையுடன் இருக்கவேண்டும். இப்படி இருப்பதால் மகாலட்சுமி எப்பொழுதும் அங்கு வாசம் செய்வாள். எந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாலோ? அங்கே தெய்வம் குடியிருக்கும். குல தெய்வத்தின் அருளும் கிடைக்கும். எப்பொழுதும் பூஜை செய்யும் போது முதலில் குலதெய்வத்தை வழிபட்டு, பிறகு விநாயகரை வழிபட்டு, பின் உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபட வேண்டும். இதெல்லாம் செஞ்சு பாருங்க உங்க குடும்பத்தில் நிகழும் மாற்றங்கள் உங்களுக்கு தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *