வாழ்க்கை முறை

இழந்த பணம், பதவி, வாழ்க்கை திரும்பெற மீண்டும் ஒரு வாய்ப்பு!

நம்முடைய வாழ்வில் விதி என்ற ஒன்று உள்ளதா, இல்லையா. விதிக்கு சக்தியுண்டா, விதியை மதியால் வெல்லலாம் என்ற பல்வேறு கோணங்களில் மனித வாழ்க்கையானது  விவாதிக்கப்படுகின்றது. 

விதியென்று இருந்தால் மதியால் வெல்ல முடியும் என்றும், விதியால் இறைவன் உங்களுக்கு உதவ முடியவில்லையென்றாலும்  நினைத்த இலக்கை அடைய முயற்சியால் மெய்வருத்திச் செய்தால் எண்ணிய இலக்கை அடையலாம் என திருக்குறளில் 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 

மெய்வருத்த கூலி தரும்

வள்ளுவர் வாக்கினால் தெரியப் பெறுவோம்.

அதாவது விதியின்பால் வாழ்க்கையில் நமக்கு நினைத்தது நினைத்தாவாறே கிடைக்காமல் போனால்  முயற்சி என்ற ஒன்று, தொடர்ந்து செய்யும்  போது அதற்கேற்றப் பலன் நிச்சயம் கிடைக்கப் பெறலாம்!

மனிதன் பிரபஞ்சத்தின் தலைவன் அவன் எண்ணியதை எண்ணியாவாறே பெறலாம். கொஞ்சம் முயற்சியும், நம்பிக்கையும், பயிற்சியும், உறுதியும் உடன் இருந்தால் வானத்தை வசப்படுத்தலாம்.  இந்தியா போன்ற நாட்டில் பல மொழிகளில் பல மதங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் தேவை உறுதித் தன்மை, நேர்மை, உண்மை என்னதான் எலக்டிரானிக் யுகத்தில் நீங்கள் வாழ்ந்தாலும்  வாழ்வின் அடிப்படைத்  தத்துவம் ஒன்றுதான் அது மெய்ஞானத்தில் தான் உள்ளது அதை அறிந்து வாழ வேண்டும். 

விட்டுப் போனது கிடைக்க:

மனித வாழ்க்கை மரியாதைக்குரிய ஒரு வரம். அதனை  அழகாக கொண்டு செல்ல அன்பு என்னும் மந்திரம் இருக்க வேண்டும்.  அது பக்கபலமாக இருக்க வேண்டும் எப்பேர்பட்ட மனிதனையும் அன்பும் உறுதியான எண்ணமும் கொண்டவர்களால் வீழ்த்த முடியும்.  

புரூஸ்லியின் உறுதித்தன்மையால் தான் அவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. ஆனால் எளிதான முறையில் இறந்து போனார். 

வாழ்வில் எளிதான எதோ ஒரு கர்ம விதி அவரை வென்றதென்றால் அங்குதான் விதி பயணிக்கின்றது. 

இவ்வாறு விதியினால், முற்பிறவிப் பயனாய் இழந்தவற்றைத் திரும்பக் கிடைக்கச் செய்யலாம். எண்ணத்தில் உறுதியுடன் தொடர்ந்து முயன்றால் எதுவும் வசப்படும்  என்பது  முன்னோர்களின் கூற்றாகும். இதனால் இழந்தை எதையும் திரும்பப் பெறலாம்.

பணம், பதவி, பொன், பொருள்  இழந்த வாழ்க்கை எதையும் முன்னோர்களின் கூற்றுப்படி நம்பிக்கையோடு நடந்தால் நிச்சயம் கிடைக்கப் பெறலாம்.  கார்த்த வீர்யார்ஜுனரின் மந்திர பார்யணம் வாழ்வினை வளப்படுத்தும். இழந்த எந்த ஒரு பொருள், வாழ்க்கை எதுவாயினும் திரும்பக் கிடைக்கச் செய்யும். 

கார்த்தயார்ஜூனரின் அருள் பெற மந்திரம்: 

நம்பிக்கையோடு    கிழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை  தொடர்ந்து பாரயணம் செய்து வாருங்கள், இந்த மந்திரத்தை  தொடர்ந்து   நம்பிக்கை மற்றும் உறுதியோடு உச்சரித்து வருகிறீர்களோ அவ்வளவு உறுதியுடன் நீங்கள் இழந்ததைத் திரும்பி பெறலாம். 

மந்திர உச்சரிப்புக்கு எண்ணிக்கை  உங்கள் விருப்பம் மேலும் உடல் மற்றும் மனச் சுத்தம் நம்பிக்கை இந்த மூன்றும் கொண்டு  தினமும் உச்சரித்து வாருங்கள் நிச்சயம் நீங்கள்  இழந்த வாழ்க்கை, பொன், பொருள், பதவி அனைத்தும் திரும்பக் கிடைக்கும். 

அபூர்வ ராஜ்ய் ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,

லபதே நாத்ர ஸ்ந்தேஹ ஸ்த்யேமேத்ந் மயோதிதம்

ஓம் கார்த்த வீர்யார்ஜூனோ நாம:

ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்

யஸ்ய ஸ்மரந மாத்ரேன் நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

.

வாழ்வில் வளமும் ஒளியும் வற்றாத செலவங்களும் அன்பும் பண்பும் பெற்று தழைத்தோங்க வாழ்த்துக்கள். 

மேலும் படிக்க:

சஷ்டி விரதமிருந்து சகலமும் பெறலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *