சிரிப்பினால் வசீகரிக்கும் பற்களை பாதுகாக்கலாமே
நாகரீக வளர்ச்சியால் மாறியுள்ள நமது உணவு பழக்கத்தால் பற்கள் பலவீனம் அடைகின்றன என்பது உண்மை. பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒரு வேளை அல்லது இருவேளை பல் துலக்கினால் பற்கள் தேய்ந்து விடும் என்பது தவறான கருத்துக்கள். இரண்டு லட்சம் வருடங்களாக பற்கள் அழிந்து போகாமல் இருப்பதை அகழாய்வுகளில் பார்க்கின்றோம்.
இயற்கை பற்பொடிகளின் நலம் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும். இயற்கை பற்பொடிகள், வேப்பங்குச்சி, திரிபலா போன்றவற்றைக் கொண்டு பற்கள் துலக்க வேண்டும். ஒட்டும் தன்மை இல்லாத உணவுகளை பயன்படுத்துவோம் ஆனால் பிரஸ் கூட தேவையில்லை. பல்பொடி கொண்டு விரலாலேயே பல் துலக்கலாம்.

ஒரு வேளை அல்லது இரு வேளை பல் துலக்குதல் என்பது அவரவர் உண்ணும் உணவினை பொருத்து துலக்கலாம். உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றி உணர வேண்டும். இயற்கை நலம் விளைவிக்கும் என்று பல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்கள் இதைப் பற்றி கூறுகையில் பிளீசிங், ப்ளூ லைட், டிடெர்ஜென்ட் பதப்படுத்தும் பொருட்கள் போன்றவை கலந்தது தான் பற்பசைகள்.
இவை அனைத்துமே உடலுக்கு சேராத பொருட்கள் தான். தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து போயிருக்கும். இது போல உடலிலேயே அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்ட ஒரு வாய் பகுதியில் உள்ள மென் திசுக்கள் தான்.

ஏற்கனவே உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ள சூழலில் காலையில் பற்பசையை வாயில் வைத்தால் அந்த ரசாயனங்கள் அனைத்தும் உடலுக்கு உடனடியா உறிஞ்சப்படும். எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட காரணம் இது தான் என்கின்றனர் பல் மருத்துவர்கள்.