மருத்துவமனை செல்வதை பெருமளவில் தவிர்க்க!
நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் அறிவுரைகள். காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து இரவில் சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும்.
நோய் தீர்க்கும் அன்றாட நடைமுறைகள் இவை. தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது. நன் பகலில் தூக்கம், இரவில் விழித்து இருத்தல், இவை நோய் விருந்து வைத்து அழைப்பதற்கு சமம்.
அதிக அளவு நீர், கீரை வகைகள், பழம் வகைகள் எடுத்துக் கொள்வதால், மலர்ச்சிக்கல் நீங்கும். நாட்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது.
உணவுக்குப் பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து கொள்வது நல்லது. வெற்றிலை உணவை எளிதில் செரிக்க வைக்கும். பாக்கு நுரையீரலில் ஏற்படும் சளித் தொல்லையை தீர்க்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு வலிமை சேர்த்து குடல் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டவை.
உணவு வகைகளில் அதிகமாக கீரைகளையும், காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமான உப்பு நோயை தருவதாகவும், உப்பு அது தப்பு என்பது இயற்கை மருத்துவர்களின் அறிவுறுத்தல்கள் ஆகும்.
கிடைக்கும் இடங்களில் எல்லாம் தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துவதை தவிர்த்து விடுங்கள். வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து வெந்நீர் குளியல் போட வேண்டும். மாதமிருமுறை உண்ணா நோன்பை இருத்தல் அவசியம்.
உரிய நேரத்தில் வெளியேற்றாமல் அடக்கி வைப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
பசித்து உணவு உண்ணுங்கள். சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வருவதால் வாதம், பித்தம் ஆகிய நோய்கள் இன்றி வாழலாம்.
ஒரு நாளைக்கு இருவேளை உணவு உண்டால் போதுமானது. நினைத்தபோதெல்லாம் உணவு உண்பதை தவிர்த்து விடுங்கள். காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்வதால் மருத்துவமனை நோக்கி செல்வதை பெருமளவில் தவிர்க்கலாம்.