நம் ஆரோக்கியம் நம் கையில் தானே இதோ உங்களுக்கான டிப்ஸ்
நம் ஆரோக்கியம் நம் கையில் தானே இதோ உங்களுக்கான டிப்ஸ்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது. இருக்கும் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் கூறுவது படி நீர் அதிகமாக பருக வேண்டும். பசுமையான காய்கறிகள், கீரைகள், பழங்கள் உணவு முறையிலும், உடல் உழைப்பிலும் உங்களுக்கேற்ற பயிற்சியிலும் கவனம் செலுத்துவதால் உடல் எடை கூடாமல் இருக்கும்.
படிப்படியாக குறையவும் செய்யும். மேலும் கண்களைப் பறிக்கும் கலர்ஃபுல் உணவுகளை வாங்கி உண்பதால் அதிகப்படியான பாதிப்பு ஆரோக்கியத்திற்கு தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குழந்தைகள் இதன் சுவையில் மயங்கி இருந்தாலும் தாராளமாக கண்டிப்பு காட்டுங்கள். உடனடியாக குறைக்காமல் வாரம் இருமுறை, ஒருமுறை என்று தொடங்கி மாதம் ஒருமுறை கொண்டு வாருங்கள்.
பிறகு இதை தொடர்ந்து ஃபாலோ செய்தாலே பல ஆரோக்கிய சிக்கல்களில் இருந்து விடுபட முடியும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவ்வளவு ஏன் குழந்தைகள் கூட செல்போனுக்கு மயங்கி தான் இருக்கின்றனர். தொடர்ந்து டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஆனால் அதிக நேரம் செலவிடுவதை கண்டிப்பாக தவிர்க்க முடியும்.
பிள்ளைகளையும் ஊக்குவியுங்கள். இந்த விஷயத்தில் கண்டிப்பாக நடந்து கொள்வது நல்லது. ஒருவித சோர்வும் ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கச் செய்யும் நேரங்களில், மன அழுத்தமும், உடல் சோர்வும் சேர்ந்து கொள்ளும். ஈடுகட்டும் வகையில் உங்களுக்கு பிடித்த விஷயங்களில் மனதை செலுத்தலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.
யோகா செய்வது, வாக்கிங், இசை கேட்பது, என்று மனதை ஓய்வில் செலுத்துங்கள். சில உணவுகளாலும், மன அழுத்தங்கள் ஏற்படும் என்பதால் உணவு வகைகளிலும் கட்டுப்பாடு தேவை. தினமும் உடற்பயிற்சி செய்து வருவதால், மூச்சுப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, வாக்கிங் ஏதோ ஒரு பயிற்சியை செய்து வருவதாலும், சம்மணம் இட்டு தரையில் உட்கார்ந்து எழுந்து இது போன்ற ஏதாவது ஒரு வேலையை உடலுக்கு கொடுப்பதால் புத்துணர்வை பெறமுடியும்.
இரவில் நல்ல தூக்கம் இருந்தால் மட்டுமே பகலில் புத்துணர்வாக வேலை செய்ய இயலும். எனவே தினமும் குறைந்தது 7 மணிநேரம் தூக்கத்தை எடுப்பதால், உங்கள் உடல் உறுப்புகளின் செயல் பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. அந்தந்த சீசனில் கிடைக்கக் கூடிய விலை மலிவான காய்கறி பழங்களை உண்டு வந்தாலே போதுமானது.
உடல் ஆரோக்கியத்திற்காக விலை உயர்ந்த பழங்களை தான் சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு நீர் அருந்துவதால் சிறுநீர் பிரச்சனை தொந்தரவு இருக்காது. மேலும் உண்ணும் உணவில் வைட்டமின், தாதுக்கள், கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வது அவசியம்.