பார்வை உங்கள் பக்கம் திரும்பும் அளவிற்கு ஓஹோன்னு வளரும்!
பருவம் அடைந்தது முதல் பெண்களுக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சினைகள் பேன் தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும். செம்பருத்திப் பூக்களையும், கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவி வந்தால் பேன்கள் ஓடி விடும்.
வாரம் இருமுறை
முடி மிருதுவாக இருப்பதற்கு சீத்தாப்பழ விதைகளை காயவைத்து பொடியாக்கி சீயக்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி பட்டுப் போல் மிருதுவாக மாறும். வெந்தயம், குன்றிமணி பொடி தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
முடி உதிர்வது உடனடியாக
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊற வைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்றுவிடும். வேப்பிலை ஒரு கைப்பிடி நீரில் போட்டு ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை வடித்து தலையில் ஊற்றி மசாஜ் செய்து தலையை அலச முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்து வர கூந்தல் வலுப்படுத்துவதுடன் கூந்தல் உதிர்வு முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். கூந்தலுக்கு எப்போதும் இருக்கமாக கிளிப் போடக்கூடாது. இறுக்கமாக கிளிப் போடுவதால் முடி உடைந்து போகும். வாரம் ஒரு முறை கண்டிப்பாக ஆயில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உதிராமல் நன்கு வளரும்.
முடி பளபளப்பாக
உலர்ந்த ஆரஞ்சு தோல், வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா தலா 250 கிராம் எடுத்து காய வைத்து மிஷினில் மையாக அரைத்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இந்தப் பவுடரை உடம்புக்கும் தேய்த்துக் குளிக்கலாம். வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம். தலை முடியின் வறட்டுத் தன்மையைப் போக்கி ஜொலி ஜொலிக்க வைக்கும் சக்தி ஆரஞ்சு தோலில் இருக்கிறது.