சமையலுக்கான சில ஆரோக்கிய குறிப்புகள்
வெள்ளை பூசணியை தோல் சீவி துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் உப்பு சேர்த்து கடுகு, பெருங்காயம் தேங்காய் துருவல் தாளித்து தயிர் ஊற்றி கலக்கினால் ருசியான தயிர் பச்சடி தயார். விரும்பினால் கேரட் துருவல், பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சுட்ட அப்பளம் நமத்து விட்டால் அந்த அப்பளங்களை நான்காக வெட்டி எண்ணெயில் மீண்டும் பொரித்தெடுத்தால் அப்பளம் வீணாகாது. ருசியும் சூப்பராக இருக்கும். முறுக்கு வகைகள் செய்யும் போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் காய விட வேண்டும்.
சரியாக இருக்கும் காய்ந்த எண்ணெயில் இருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் ஊற்றிப் பிசைந்தால் முறுக்கு கரகரப்பாக இருப்பதோடு கருகாமல் வரும். வீட்டில் பஜ்ஜி செய்யும் போது மாவுடன் சாட் மசாலா அல்லது கரம் மசாலா கொஞ்சம் சேர்த்து பிசைந்து பஜ்ஜி செய்து கொடுக்க சூப்பராக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.
பச்சை மிளகாய்களை ஈரம் இல்லாமல் துடைத்து ஒரு டப்பாவில் போட்டு மஞ்சள் தூளை தூவி காற்றுப் புகாமல் மூடி வைத்தால் ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே பல நாட்கள் வரை பச்சைமிளகாய் பிரஷ்ஷாக இருக்கும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் டப்பாவில் போட்டு கொடுத்தனுப்பினார். பல துண்டுகளாக நறுக்கி ஏதும் சர்க்கரை நீரில் முக்கி தண்ணீரை உதறிவிட்டு டப்பாவில் வைக்க வேண்டும் சுவை கூடுதலாக இருப்பதோடு பழம் கருத்துப் போகாமல் இருக்கும்.
பருப்பு உசிலி செய்ய ஊற வைத்த பருப்பு வகையை அழைத்ததும் 12 ஸ்பூன் எண்ணெய் கலந்து மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடம் வைத்து எடுத்தால் பின்பு காய்களின் மேல் தூவி விட வேலையும் குறையும். எண்ணையும் மிச்சமாகும்.
இரவுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக காலையிலேயே சமைக்கிறோம் என்றால் சாம்பார், பொரியல், கூட்டு, அவியல், மோர் குழம்பு என எதுவாக இருந்தாலும் ஒரு பாதியை தனி பாத்திரத்தில் காலையிலேயே தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். கை படாதவாறு இருந்தாள் கெட்டுப் போகாது.