டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வுக்கால குறிப்புகள்!

டிஎன்பிஎஸ்சி  குரூப் 2 தேர்வு நவம்பர் 11, 2018 இல் தமிழ் நாட்டிலுள்ள  பள்ளிகளில்  நடக்கவுள்ளது. தேர்வு காலத்தில் கடைக்கப்பிடிக்க வேண்டிய  தேர்வு குறிப்புகள் போட்டி தேர்வர்கள் பயன்பாட்டிற்காக கொடுத்துள்ளோம் அதனை பயன்படுத்த வேண்டும். 
தேர்வு காலம் இது உடல் மனம் ஆகிய இரண்டையும் வலுவுடன் ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம் ஆகும். 

குரூப் 2 தேர்வு இரண்டு தாள்களை கொண்டுள்ளது ஒவ்வொன்றிலும் தேர்வர்களான உங்களின் பலம் எது பலவீனம் எது பலத்தை எப்படி வெற்றிப் பாதையில் செலுத்துவது போன்ற யுக்திகளை வகுத்துச்  செயல்படுங்கள்.


லட்சக்கணக்கானோர் பங்கு கொள்ளும் தேர்வு ஆதலால் இந்த தேர்வை வெல்ல  மெனகெடுதலுடன் பண்டிகைக்காலத்தில் கொண்டாட்டத்திற்கான காலத்தை அதிகம் செலவு செய்யாமல்  கொஞ்சம் தியாகம் செய்து நேரத்தை பயன்படுத்தி  தேர்வுக்கு தயாரக  வேண்டும். 
மனஅழுத்தம் தரும் எந்த நிகழ்வை குறித்தும் அதிகம் சிந்திக்க வேண்டாம். காலை மாலை காலர நடந்து வரவும்.

எம்ஜிஆரின் நான் நடந்துவிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனை படாமாட்டார்கள், வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் மற்றும்  அண்ணாமலை  படத்தின் வெற்றி நிச்சயம் இதுவே என் லட்சியம் கொள்கை வெல்வதே  நான் கொண்ட சத்தியம் போன்ற நேர்மறை சிந்தனையுடைய எழுச்சியூட்டும் பாடல்களை  சோர்வடையும் பொழுது கேட்கும் பொழுது நல்ல உள்ள ஊக்கம்  கிடைக்கப் பெறலாம். உளவியல் ரீதியான  மாற்றத்தை உண்டு  செய்யும்.

மூச்சுப் பயிற்சி


மூச்சுப் பயிற்சி,   படித்ததினை நினைவில் வைக்கும் யோக முத்திரைகளை தினமும் 10 நிமிடம் வைத்து  மூச்சுக் காற்றில் கவனம் வைகயுங்கள் 
குரூப் 2 தேர்வை வெல்ல படிக்கும் நேரத்தில் தொலைபேசியை வெகு தொலைவில் வையுங்கள் அது படிக்கும் நேரத்தில் இடையூறு செய்யது. 
நல்ல நேர்மறை சிந்தனை கொண்ட நண்பர்கள் குழுவுடன் திட்டமிட்டு படித்து அதுகுறித்து கலந்துரையாடல் செய்யுங்கள் கலந்துரையாடலில் எந்த வித குறுக்கீடும் செய்யாமல் தெரிந்ததை தெரியப்படுத்தி தெரியாததை தெரிந்து கொண்டு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் பெறலாம். 

ஆரோக்கியமான உணவை  உண்ணுங்கள்

தேர்வுகாலம் மற்றும் மழை பெய்யவும் வாய்ப்புகள் உள்ளகாலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டு தேர்வுக்கு தயராகுங்கள். 
மழைக்காலத்தில் நோய் தொற்றுக்கள் உடல் அசதி போன்றவை ஏற்படும் அதனை விரட்ட ஆரோக்கியமான உணவை  உண்ணுங்கள். 
மழைக்காலம் என்பதால்  அதிக  குளிர் மற்றும் ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் இதனால் தூக்கம் வரவாய்ப்புள்ளது. அதனை சமாளித்து படிக்க வேண்டும். 
 குரூப் 2 வில் முதண்மை மற்றும் முக்கியத் தேர்வு அத்துடன் நேரடித் தேர்வு என்பதால் முதண்மை  தேர்விலே தேவையான அளவுக்கு முக்கிய தேர்வு மற்றும் நேரடி தேர்வு மனதில் கொண்டு படித்தால் எளிதில் மூன்று கட்டத் தேர்வுகளையும் எளிதில் வெல்லலாம். 


போட்டி தேர்வில்  தேர்ச்சி பெறும் மதிபெண்களில் கவனம் செலுத்துவதைவிட  முதல் 100 இடங்களுரியவர் நீங்கள் என்னும்  இலக்குடன் படிக்க வேண்டும். 
தேர்வுக்கு தேவையான பேனாக்களை தேர்வுக்கு முன்பு வாங்கி அவற்றினை தேர்வுக்கு முன்பு பயன்படுத்தி தயார் செய்யவும் பயிற்சிக்கு பின் தேர்வறையில் பயன்படும் பொழுது  தேவையற்ற சங்கடங்களில் இருந்து தப்பிக்கலாம்.  


பாஸிட்டாவாக இருக்கும் பொழுது அதிகம் படிக்க முடியும்  தொடர்ந்து படிக்கும் பொழுது அவ்வப்பொழுது சிறிய இடைவெளி எடுத்து  பின்  மீண்டும் படிக்கத் தொடங்குங்கள். 
தேர்வு எழுதுவது யாராக இருக்கட்டும் வெல்வது நீங்களாக இருங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *