ஆன்மிகம்ஆலோசனை

வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க விரும்பியதைப் பெற முடியும்

வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடிப்பது விரும்பியதைப் பெற முடியும். நாம் எவ்வளவு விரதங்களை மேற்கொண்டாலும் அதற்கான பலன்களை பெறுவதற்கு சில காலங்கள் ஆகும். ஒரு சிலருக்கு வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். ஒரு சிலரின் வேண்டுதல் சில மாதங்கள் எடுத்துக் கொள்கிறது.

ஏன் இந்த மாற்றங்கள். மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக தானே படைக்கப்பட்டிருக்கிறார்கள். எதற்காக இப்படி ஒவ்வொருவரும் ஏற்றத்தாழ்வுகள் உடன் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் முன்வினைப் பயன் என்று ஒன்று உள்ளது. அதற்கு ஏற்றார் போலத் தான் இந்த ஜென்மத்தில் அவர்களுடைய வாழ்க்கை அமைகிறது. என்று பரமாத்மா கூறுவதாக புராணங்களில் படித்திருப்போம்.

மேலும் நல்ல ஒழுக்கங்களை மேற்கொண்டு நல்லதையே நினைத்து, நல்ல செயல்களை மட்டுமே செய்து வந்தால் அவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வதற்காகவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு வீடும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். என்பதற்காகவே வெள்ளிக்கிழமை வாசலில் பசுஞ்சாணம் தெளித்து, கோலங்கள் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, அழகாக வைக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயும் தேவையற்ற பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. வீட்டிற்குள்ளும் எல்லா பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமைக்கு முன் முந்தைய நாள் வீட்டை பெருக்கி துடைத்து பூஜை அறையையும் சுத்தமாக்கி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து பெண்கள் மஞ்சள் பூசி குளித்துவிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். வீட்டில் லட்சுமி படங்களுக்கு பொட்டுவைத்து, பூ போட்டு, தீபமேற்றி ஊதுபத்தி கொளுத்தி, சாம்பிராணிப் புகை போட வேண்டும்.

ஒட்டுமொத்த வீடும் பளிச்சென்று இருப்பது அவசியம். வீட்டில் மஹாலக்ஷ்மி ஸ்லோகங்கள், பெருமாள் ஸ்லோகம், கந்த சஷ்டி கவசத்தை ஒலிக்க விடலாம். உங்களுக்கு தெரிந்த லட்சுமி ஸ்லோகங்களை பாராயணம் செய்யலாம். அம்மன் பாடல்கள் பாடி தூபதீபம் காட்டி வழிபடலாம்.

காலை ஒரு வேளை விரதமிருந்து, மதிய உணவு உண்டு, இரவு டிபன் எடுத்துக் கொண்டு விரதத்தை முடிக்கலாம். தொடர்ந்து வெள்ளிக்கிழமை விரதம் இருப்பவர்களுக்கு லட்சுமியின் கடாட்சம் பெருகும். இன்றைய தினம் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாரை தரிசிப்பது அவசியம்.

சர்க்கரை பொங்கல், கேசரி, பால் பாயாசம் இவற்றில் ஏதாவது ஒன்று நிவேதனம் செய்து சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், பூ, பழம், வெற்றிலை பாக்கு வைத்து தாம்பூலம் கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *