Fast pregnancy foods: விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க இதை சாப்பிடுங்க??
கணவன் மனைவி இருவருக்கும் இப்பொழுது மிகப்பெரிய கவலையாக இருப்பது குழந்தை பாக்கியம் தான். கணவன் மனைவியின் அன்பின் சாட்சியாக விளங்கும் குழந்தை வரம் கிடைக்க தற்பொழுது உள்ள தம்பதிகள் கோவில் கோவிலாக செல்கின்றனர்.மேலும் மருத்துவமனைகளில் குழந்தைக்காக மருத்துவம் பார்க்க வரும் கணவன் மனைவிகள் ஏராளமானோர் உள்ளனர். திருமணமாகி மூன்று மாதங்களுக்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்க பல பேர் பல வழிகளை சொல்கின்றனர். இன்னும் குழந்தை பிறக்கவில்லையா ஏதாவது பிரச்சனையா மருத்துவமனையில் பார்க்கலாமே என்று அவரவர்களின் கருத்துக்களை திணிக்கின்றனர். அடுத்தவர்கள் சொல்வதற்காக நாம் குழந்தை பெற்றுக் கொள்ள போவதில்லை.
ஆனால் தம்பதிகளுக்குள்ளாகவே குழந்தை வேண்டும் என்ற ஆசை உருவாகும் பொழுது குழந்தை கிடைக்கவில்லை எனில் அது மிகப்பெரிய மன வருத்தத்தை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறது. ஒருவருக்கொருவர் மாறி மாறி இதைப் பற்றியே பேசிக்கொண்டு தங்களின் வாழ்க்கையை கழிக்கின்றனர். தாங்களாகவே ஏதாவது ஒரு பிரச்சனை இருக்குமோ என்று வருத்தப்பட்டு தங்களது வாழ்வை சரியாக வாழாமல் உள்ளனர்.
அப்படி குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகளுக்கு விரைவில் கரு உருவாக உணவிலேயே ஒரு சில மாற்றங்களை நாம் செய்தால் போதும். குழந்தைக்காக ஏங்கும் தம்பதிகளில் நூறில் 98 சதவீதம் பேருக்கு பிரச்சனையாக இருப்பது சத்துக் குறைபாடு தான். அதை உணவிலேயே நாம் சரி செய்து விடலாம். குழந்தை பேரு சீக்கிரம் கிடைக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற ஒரு சில டிப்ஸ்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
விரைவில் கரு உருவாக சாப்பிட வேண்டிய உணவுகள்
- கணவன் மனைவி இருவரும் 40 முதல் 50 நாட்கள் தினமும் இரவு வேளையில் தூங்குவதற்கு முன்பு மாதுளம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
- தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறை அத்திப்பழம் எடுத்து வருவது குழந்தை பேரு விரைவில் ஏற்பட மிக உதவியாக இருக்கும். அத்தி பழத்தை நீங்கள் ஜூஸ் செய்து சாப்பிடலாம் அல்லது பொடியாக அரைத்து வைத்துக் கொண்டு தினமும் காலை நேரத்தில் பாலில் கலந்து குடித்து வருவது நல்லது.
- குழந்தை பாக்கியம் வேண்டி இருக்கும் கணவன் மனைவி இருவரும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு செவ்வாழைப்பழம் எடுத்துக் கொள்வது கருப்பை வலுப்பெற உதவும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும்
- கணவன் மனைவி இருவரும் செவ்வாழைப்பழம் தினமும் இரவு எடுத்துக் கொள்ளலாம் அல்லது நறுக்கிய செவ்வாழைபழத்தை தேனில் ஊறவைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
- முருங்கைக்கீரை தினமும் சாப்பிட்டு வர கருப்பை வளரும் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடிக்கடி உணவில் முருங்கைக்கீரை சேர்த்து கணவன் மனைவி இருவரும் சாப்பிடுவது மிக நல்லது. முருங்கைக்கீரை சூப் செய்தும் தினமும் மாலை நேரத்தில் குடித்து வரலாம்.
- தினமும் இரவு ஒரு டம்ளர் நீரில் 5 பாதாம் ஐந்து கருப்பு திராட்சை இரண்டு வால்நட் ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் , திராட்சை, வால்நட் ஆகியவற்றை வாயில் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் ஊறவைத்த தண்ணீரையும் வீணாக்காமல் குடிப்பது மிக நல்லது. நட்ஸ் ஊறவைத்த தண்ணீரில் அவ்வளவு சத்து நிறைந்துள்ளது.
- தினை மாவில் தேன் கலந்து அடிக்கடி உணவு சேர்த்து வரலாம் அது கணவன் மனைவி இருவருக்கும் அதிக சக்தியை தருகிறது பெண்கள் பலவீனமாக இருந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மேலும் ஆண்களுக்கு சோர்வை போக்கி புத்துணர்ச்சியுடன் இருக்க உதவி புரிகிறது.
- குழந்தைக்காக ஏங்கும் தம்பதிகள் ஓவுலேஷன் டேட் என்று சொல்லக்கூடிய தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவகேடோ பழத்தை கணவன் மனைவி இருவரும் சாப்பிடுவது மேற்கொள்வதற்கும் பெண்ணின் கருப்பை வலுபெறவும் உதவுகிறது.
- தினமும் நீங்கள் பருகும் நீரின் அளவை அதிகப்படுத்த வேண்டும். தண்ணீர் பலவிதமான நோய்களுக்கு அறிய மருந்தாக நீங்கள் சாதாரணமாக தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக தண்ணீரில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து குடிப்பது மேலும் நல்லது.
- தினசரி இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழம் கணவன் மனைவி இருவரும் எடுத்துக் கொள்ளலாம்.
- வாரத்தில் இரண்டு நாட்கள் அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் கருவேப்பிலை கொழுந்து சிறிதளவு சாப்பிட்டு வருவது எங்களின் கருப்பை வலுப்பெற உதவும்.