போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு!
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற லட்சியக் கனவாக கொண்டோருக்கு உதவ நடப்பு நிகழ்வுகளின் கேள்வி தொகுப்பினை கொடுத்துள்ளோம். பின்பற்றி தேர்வுக்கு தயாராகவும்.
1. வங்ககடலில் டிசம்பர் 13-20, 2018 இல் தீவிரமாக உருவெடுத்த புயலுக்கு என்ன பெயர்?
விடை: பெய்ட்டி புயல்
2. நிமோனிசியா தடுப்பூசி திட்டம் நாட்டிலேயே முதன் முதலாக முதியோர்க்கு வழங்கப்பட்ட இடம் எது?
விடை: தமிழ்நாடு சென்னையின் வியாசர்பாடியில் வழங்கப்பட்டது.
3. கஜாபுயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவடட்ங்கள் எவை?விடை: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை
4. இந்தியாவில் முதல் முறையாக மாணவர்களின் புகைப்படம் எடுத்து வருகைப்பதிவை செய்யும் திட்டத்தினை துவங்கிய இடம் எது?
விடை: சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி
5. பிரதமரின் தாய்மை வந்தன திட்டத்தின் நோக்கம் என்றால் என்ன?
விடை: பிரதமரின் தாய்மை வந்தனத் திட்டம் என்பது பெண்களுக்குப் பேறுகாலப் பயன்கள் தரும் திட்டமாகும்.
6. 42வது இந்திய சமூக அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம் யாது?
விடை: ஒடிசாவில் புவனேஷ்வரிலுள்ள கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
7 இந்திய சமூக அறிவிய மாநாட்டின் கருத்துரு யாது?
விடை: டிஜிட்டல் யுகத்தில் மனித எதிர்காலம் என்னும் கருத்துருவில் நடைபெற்றது.
8. 106வது இந்திய அறிவியல் மாநாடு -2019 எங்கு நடைபெற்றது?
விடை: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 2019 ஜனவரி 3முதல் 7, 2019 வரை நடைபெறவுள்ளது.
9. மனித உரிமை மீறல் புகார் அளிக்க கொடுக்கப்பட்டுள்ள இலவச அழைப்பு எண்ணை தேசிய மனித உரிமை கமிசன் எண் யாது?
விடை: 14433
10. தேசிய நீர்வழிகளில் மொத்தம் எத்தனை வழிகள் பயன்பாட்டில் உள்ளன?
விடை: 13 நீர்வழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
11. இந்தியாவின் 25வது உயர்நீதிமன்றமாக எந்த மாநிலத்தில் செயல்படுகின்றது?
விடை: ஆந்திரப் பிரதேசம்
12. மத்திய பிரதேசத்திலுள்ள கிர் சிங்கங்கள் கொண்ட புதிய தேசிய பூங்கா எது?
விடை: குனோ
13. அஸ்ஸாமின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட பாடகி யார?
விடை: போதாகூர்
14. இந்தியாவின் வளர்ச்சி மேம்பாட்டுக்கான குறியீட்டில் முன்னனி இடங்கள் பிடித்துள்ளன?
விடை: இமாச்சல்ப பிரதேசம், கேரளம், தமிழகம் மாநிலங்கள் முன்னனி இடங்கள் பிடித்துள்ளன.
15. இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான சர்வதேச தகவல் இணைவு மையம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
விடை: ஹரியானாவில்
16. ஆசிய சிங்கங்கள் பாதுகாப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தைமத்திய சுற்றுச்சூழக் அமைச்சகம் வெளியிடப்பட்ட நாள் எது?
விடை: 20-12-2018
17. உலக மூலிகை காடு திட்டத்தை துவங்கப்பட்டது யாரால்?விடை: பதஞ்சலி நிறுவனமும் ஹரியானா மாநிலமும் இணைந்து சண்டிகரிலுள்ள மோர்னி மலைப் பகுதியில் துவங்கியுள்ளன.
18. இந்தியாவின் அதிவேக ரயிலான கருதப்படும் ரயில்-18 சேவையை பிரதமர் என்று தொடங்கினார்?
விடை: டிசம்பர் 29, 2018
19. நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயில் எங்கு தயாரிக்கப்பட்டுள்ளது?
விடை: சென்னை ஐசிஎஃபில்
20. தொடர்ந்து 941 நாட்கள் தொடர்ந்து இயங்கிய உலகின் முதல் அணு உலை என்ற சாதனை படைத்தது எது?
விடை: கெய்கா யுனிட்-1
21. இந்தியாவில் கலை, அறிவியல் வர்த்தகம் மற்றும் மருத்துவம் பயிற்றுவிக்கும் பெண்களுக்கான கல்வி நிறுவனங்களின் மொத்தம் எத்தனை?
விடை: 4219
22. டிவ்ஜிங் திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகின்றது?
விடை: அஸ்ஸாம் மாநிலத்தின் ஏய் ஆற்றின் கரையோரத்தின் டிசம்பர் 272018, ஜனவரி 7, 2019
23. டிராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி 2018 செப்டம்பர் 30, 2018 தேதியின்படி இந்தியாவில் இணைப்பு பெற்றொர் எண்ணிக்கை எத்தனை?
விடை: 56 கோடி
24. முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள் எது?
விடை: 27.12.2018
25. NEIDS திட்டத்தின் நோக்கம் யாது?
விடை: வடகிழக்கு மாநிலங்களில் தொழில்மயமாவாதை துரிதப்படுத்த மத்திய அரசின் திட்டமாகும்.