சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஆரோக்கிய சமையலுக்கான சில குறிப்புகள்

ஆரோக்கிய சமையலுக்கான சில குறிப்புகள். சேப்பங்கிழங்கு வேக வைக்கும் போது ஒரு சில கிழங்குகள் வேகாமல் கல் போல் அப்படியே இருக்கும். அவற்றை சமையலுக்கு பயன்படுத்தி விட்டு கல் போல் இருக்கும் கிழங்குகளை தனியே எடுத்து தோல் சீவி வட்டமாக நறுக்கி எண்ணெயில் பொரித்து உப்பு காரம் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

வெண் பொங்கல் செய்யும் போது குக்கரை திறந்து சூட்டோடு இரண்டு கரண்டி அளவு இதில் விட்டு கிளறி மசித்து வைத்து விட்டால் பரிமாறும் போது நன்றாக இளகி இருப்பதுடன் கூடுதல் சுவையோடு இருக்கும்.

சூப் தயாரிப்பது கெட்டியாக இருக்க சோள மாவு சிறிதும் சத்து மாவை சிறிதும் கலந்து சேர்ப்பதால் கூடுதல் சத்து கிடைக்கும். நாம் தயாரிக்கும் எந்த பதார்த்தமும் நீர்த்துப் போனாலும், அதில் சத்து மாவை கரைத்து விடுவதால் கெட்டியாகி விடும்.

கடைகளிலிருந்து வாங்கி வந்த காய்கறிகள் முற்றலாக இருந்தால் தூக்கி எறிய வேண்டாம். அதை அப்படியே பிரிட்ஜில் சேமித்து வையுங்கள். சாம்பார், குருமா போன்றவற்றை தயாரிக்கும் போது இந்த காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி 10 நிமிடங்கள் வேக வைத்து அந்த தண்ணீரை மட்டும் ஈர்த்து மற்ற உணவு வகைகளை தயாரிக்கும் போது சேர்த்து விடலாம். கூடுதல் சத்து கிடைக்கும்.

இரண்டே நிமிடங்களில் ருசியான இனிப்பு உருண்டை தயாரிக்க பொருட்களையும் உரித்த ரெண்டு ஏலக்காயையும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளுங்கள். அதில் கால் கப் துருவிய வெல்லத்தையும் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுங்கள். உருண்டை பிடிக்கும் பதத்துக்கு நெய் சேர்த்து உருண்டைகளாக செய்து கொடுத்தால் எல்லோரையும் அசத்த முடியும். அதிரடியான ஸ்நேக்ஸ் தயார்.

வடைக்கு அரைத்த மாவு நீர்த்துப் போய் விட்டாள். வடை தட்ட சிரமமாய் இருக்கும். இதற்கு அப்ப குழியை அடுப்பில் வைத்து குழிகளில் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை மாவை ஊற்றி எடுத்தால் சூப்பரான போண்டா தயார் ஆகிவிடும். விரும்பினால் மாவில் தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *