‘பாஸ்டேக்’ கால அவகாசம் நீட்டிப்பு.. ‘பாஸ்டேக்’ அவசியம் என்ன?
நாடு முழுவதும் 100% பாஸ் டேக் கட்டண வசூல் நடைமுறைக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 80 சதவீத வாகனங்கள் பாஸ் டேக் கட்டண நடைமுறைக்கு மாறிவிட்டன. நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிஜிட்டல் முறையிலான பாஸ் டேக் நடைமுறை புத்தாண்டு முதல் வசூலிக்கப்படும் என அறிவித்து இருந்தது. சமீபத்தில் தற்போது பிப்ரவரி 15 வரை இந்த கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
- நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிஜிட்டல் முறையிலான பாஸ் டேக் நடைமுறை.
- 100% பாஸ் டேக் கட்டண வசூல் நடைமுறைக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி.
- வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வழங்கி வருகின்றன.
சுங்கக் கட்டணம்
சமீபத்தில் தற்போது பிப்ரவரி 15 வரை இந்த கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வழங்கி வருகின்றன. இந்த பாஸ்டேக் வாகனத்தின் முன்பு கண்ணாடியில் ஒட்டினால் போதுமானது. சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும் போது அங்குள்ள கருவியை வழியாக சுங்கக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
இதன் மூலம் அந்த வாகனம் உரிமையாளரின் கணக்கில் பணம் கழித்து கொள்ளப்படுகிறது. இந்த வசதியால் ஒவ்வொரு வாகனங்களும் வரிசையில் நின்று காத்திருந்து பணம் செலுத்துவது முற்றிலுமாக குறையும். போக்குவரத்து நெரிசல் இருக்காது. காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
கட்டணம் அபராதம்
பல சுங்கச்சாவடிகளில் பல்வேறு வாயில்களில் ஒரு வாயிலில் மட்டுமே பணம் ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது. மற்ற வாயில்களில் பாஸ்ட் டேக் முறை கட்டணம் வசூலிக்க மாற்றப்பட்டுள்ளன. மேலும் பாஸ்டேக் இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் அபராதம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.