ஆன்மிகம்ஆலோசனை

நன்மைகளை வாரி வழங்கும் குருபகவான் விரதம்

நன்மைகளை வாரி வழங்கும் குரு விரதம் இருப்பது எப்படி? குரு விரதம் இருப்பதால் பல நன்மைகளை வாரி வழங்குபவர் குரு பகவான். வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் குரு நாளான வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

குரு விரதம் ஆரம்பிக்கும் பொழுது வளர்பிறையில் வருகின்ற வியாழக்கிழமையில் தொடங்க வேண்டும். தொடர்ந்து வியாழக்கிழமை விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

வியாழக்கிழமை அதிகாலை எழுந்து குளித்து காலைக்கடனை முடித்துவிட்டு, மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும். நெற்றியில் சந்தனம் பொட்டு வைக்கவும்.

பூஜை அறையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து 6 அகல் விளக்கு தீபங்களை ஏற்றி, இனிப்பு, கொண்டைக் கடலைகள், சர்க்கரை பொங்கல், கற்கண்டு ஆகியவற்றை நிவேதனமாக வைத்து தூப தீபங்கள் காட்டி குரு பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

ஒரு வேளை உணவு உண்பது சிறந்தது. குருபகவான் விரதம் இருப்பதன் மூலம் தங்களின் வாழ்வில் குரு பகவானின் அருளால் அனைத்து நன்மைகளும் நிச்சயம் பெறுவதோடு, குருபகவான் விரதத்தை மற்ற ஆங்கில தேதி நட்சத்திரக் கிழமை ராசி போன்றவற்றில் பிறந்தவர்களும் அனுஷ்டிக்கலாம்.

குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு, குருபகவானின் ஸ்தலம் ஆலங்குடி, திருச்செந்தூர் முருகப்பெருமான் மற்றும் அருகாமையில் உள்ள கோவில்களுக்கு சென்று வியாழக்கிழமை தோறும் முல்லைப்பூ மாலை, கொண்டைக்கடலை மாலை, சுண்டல் பிரசாதம், பொங்கல் படைத்து குரு பகவானின் நாமத்தை உச்சரித்து வழிபட்டு வர குருபகவான் பாதகமாக பெயர்ச்சியாகி கெடுதலான பலன்களை ஏற்படுத்தாமல் காத்தருள்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *