இது தெரியாம போச்சே..!!
ஜாதிக்காய், ஜாதிபத்திரி கேள்விபட்டிருப்போம். நாட்டுமருந்து இது மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஜாதிக்காயை உடைத்து சிறு சிறு துண்டுகளாக செய்து, சுமார் இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் நல்லெண்ணெயைக் பொன்னிறமானதும் எடுத்து எண்ணையை குளிர வைத்து வடித்து எடுத்து வைத்துக்கொண்டு, வாதநோய் பகுதிகளுக்கு தேய்த்து வருவதால் குணம் கிடைக்கும்.
தலைவலிக்குக் கூட தடவலாம். குறிப்பாக காலரா முதலிய நோய்களால் வாந்தி, பேதி முதலிய தொல்லைகள் உடலில் உள்ள நீர் அதிகமாக வெளியேறி உள்ள சமயங்களில் ஜாதிக்காயை ஒரு டம்ளர் தண்ணீரில் உடைத்துப் போட்டு காய்ச்சி, அதில் ஒரு இளநீர் கலந்து ஒரு தடவைக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்கச் செய்தால் நல்லது..
இயற்கை மூலப் பொருட்களை
இயற்கை மூலப் பொருட்களை பல உருவில் மாற்றி லேகியம், கசாயம், பஸ்பம் முதலிய முறைகளில் தயாரித்து பெரிய அளவில் விளம்பரம் செய்து ஏராளமாக பொருளீட்டும் வைத்தியர்கள் பலரை நாம் நாள்தோறும் பத்திரிகையில் பார்த்திருக்கிறோம். உண்மையை உணரும் வாய்ப்பில்லாமல் தான் பல்லாயிரம் ரூபாய் செலவில் செய்யும் விளம்பரங்கள் ஆடம்பரங்கள் அனைத்தும் பலர் விலை கொடுக்கிறார்கள்.
விக்கல் தூக்கமின்மை ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு அதிமறதி தொல்லைகளுக்கு சுமார் 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன், புதிய நெல்லிக்காய்ச் சாறு, ஒரு மேஜைக் கரண்டி அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் கிடைக்கும். அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று போக்கு முதலியவைகளுக்கு பொடி செய்த ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து, ஆப்பில் ரசம் அல்லது வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
ஜாதிபத்திரி மருந்து உபயோகிப்பது போலவே ஜாதிக்காய்களையும் நம் நாட்டில் நெடுங்காலமாக மருந்து பொருளாக உபயோகித்து வந்திருக்கிறார்கள். வயிற்றில் வாய்வு பொருமல் இருந்தால், வெற்றிலை பாக்குடன் சிறிதளவு சேர்த்து மென்றால் குணம் கிடைக்கும்.
புத்துணர்ச்சி ஊட்ட
சாதாரணமாக உணவுக்கு வாசனையும் சுவையும் மூட்டும் ஏலம், கிராம்பு முதலியவைகளை போலவே உபயோகித்து வருவதுடன் வெற்றிலை பாக்குடன் உபயோகித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருந்தாலும், அதை உபயோகித்தால், தலைசுற்றல் தொல்லைகளையும் கொடுக்கும்.
இந்த ஜாதிக்காய் மரத்தில் உற்பத்தியாகும். காயின் மேல் தோலை நீக்கினால், உள்ளே உள்ள கொட்டையின் மேல் லேசாக போடப்பட்டிருப்பது தான் ஜாதிபத்திரி. நல்ல கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை தனியாக எடுத்து காய வைத்தால் வெளிரிய சிவப்பு மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும்.
நீண்ட நெடுங்காலமாகவே இதன் மருத்துவ பயன்களை நம் நாட்டு வைத்திய துறையினர் பல பிரிவினரும் உணர்ந்து உபயோகித்து வந்திருக்கிறார்கள். ஜாதிக்காய் ஜாதிபத்திரி மரங்கள், மலேசியா, சிலோன், சிங்கப்பூர் முதலிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றன. இப்பொழுது கேரளம், நீலகிரி முதலிய இடங்களிலும் இது வளர்க்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.