நீரிழிவு நோய் குணமடைய செய்யும் அற்புதத் திருத்தலம்
திருவெண்ணியூர் வெண்ணிக்கரும்பர் கரும்பேஸ்வரரை வழிபட சர்க்கரை வியாதி குணமடையும் என்று நம்பப்படுகின்றன. அந்த வகையில் மருத்துவர்களை தாண்டி தான் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது.
இக்கோவிலில் வெண்ணிகரும்பேஸ்வரருக்கு சர்க்கரை மற்றும் ரவையைக் கொண்டு அர்ச்சனை செய்து பிரகாரத்தை சுற்றி வந்து இவற்றை பிரகாரத்தில் தூவ எறும்புகள் தின்று விட்டாள் சர்க்கரை நோய் குணமாகும் என்பது ஐதீகம்.
இப்படி வேண்டி வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்கு வந்து சர்க்கரை பொங்கல் படைத்து தன் நேர்த்திக்கடனை தீர்த்துக் கொள்கின்றனர்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று வேண்டி வலைகாப்பு முடிந்தவுடன் இங்கு உள்ள ஸ்ரீ சவுந்தரநாயகி அம்பாளை வணங்கி வளையல்களை கட்டிவிட சுகப்பிரசவம் ஆகும் என்று நம்பப்படுகிறது.
சிவ தலங்களில் இக்கோவில் வித்தியாசமான ஒன்றாக உள்ளன. சிவலிங்கம் கரும்புகழிகளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்தார் போல் உள்ளன. கோவில் தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் நீடாமங்கலம் அருகில் கோவில் வெண்ணி இடத்தில் அமைந்துள்ளது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழமையான புராண கோயிலாக அமைந்துள்ளது. கொரோனா முன்னதாக காலை 8 முதல் 12 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணி வரையும் இக்கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் சரியான உணவு பழக்கங்கள் இன்றி அவதிப்படும் நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய் குணமாக இக்கோவிலுக்கு சென்று வர விரைவில் குணமடையலாம்.