பிரபல ஸ்னாக்ஸ் வாழைக்காய் சிப்ஸ் சாப்பிடும் போது!
தினம் தோறும் நாம் உண்ணும் உணவில் அக்கறை கொள்வது அவசியம். பசி எடுக்கும் போது உணவு உண்பதும். இடைவெளியில் சிறிது பழங்கள் அல்லது ஸ்னாக்ஸ் எடுத்துக்கொள்வது வழக்கத்தில் உள்ளன. பாதாம், முந்திரி, வால்நட் பசிக்கும் போது சாப்பிட்டுவிட்டு சிறிது வாழைப்பழ சிப்ஸ் எடுத்துக் கொண்டால் பசி அடங்கும்.
- உண்ணும் உணவில் அக்கறை கொள்வது அவசியம்.
- பசி எடுக்கும் போது உணவு உண்பதும். இடைவெளியில் சிறிது பழங்கள் அல்லது ஸ்னாக்ஸ் எடுத்துக்கொள்வது.
- வாழைப்பழ சிப்ஸ் எடுத்துக் கொண்டால் பசி அடங்கும்.
பழங்களே சிறந்தது.
சுவையாக இருப்பதால் நேரடியாக வாழைப்பழத்திற்கு மாற்றாக வாழைப்பழ சிப்ஸ் வகைகளை உண்பது நல்லது என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். எப்போதும் பழங்களே சிறந்தது. அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ் வகைகளை விட இந்த வாழைப்பழம் உடலுக்கு நல்லது தான். நாம் மிகவும் சோர்வாக இருக்கும் போது புத்துணர்ச்சி பெற விரும்பினால் வாழைக்காய் சிப்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
நன்கு உடற்பயிற்சி செய்த பிறகு இந்த சிப்ஸ் சாப்பிடலாம். பொரித்த உணவு என்பதால் மீண்டும் சாப்பிட தூண்டக்கூடிய உணவு வகைதான் இதுவும். எப்போது சாப்பிட்டாலும் அளவை கருத்தில் கொண்டு அளவாக சாப்பிடுவது அவசியம். வாழைக்காயை மெலிதாக சீவி பொரிப்பதற்கு முன்பு சர்க்கரைப்பாகு, உப்பு மற்றும் சுவையை அதிகரிக்க சில மசால்களை பொரட்டி எடுப்பதால் தான் இதன் மணமும், சுவையும் அனைவரையும் கவர்ந்து இழுக்கின்றது.
உடலுக்கு ஆரோக்கியம் வாழைப்பழ சிப்ஸ்
வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இதிலிருந்து தயாரிக்கப்படும் சிப்ஸ் உடலுக்கு நல்லதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஒன்றை வாயில் வைத்து சாப்பிட்டால் இதன் சுவைக்கு நா அடிமையாகி விடும். வாழைக்காய் சிப்ஸ் இந்தியாவில் பிரபலமான ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்று. தேங்காய் எண்ணெயில் மொறு மொறு வென பொரித்து இருப்பதால் இதன் சுவையும் அதிகம்.
பொரித்த உணவுகள் கலோரிகள் அதிகமா
இதை சாப்பிடுவதால் சர்க்கரை 25 கிராம், கொழுப்பு 25 கிராம், நார்ச்சத்து 5 கிராம், புரதம் ஒரு கிராம், கலோரி 374 கிராம், பிற சத்துக்களும் இந்தப் பொரித்த சிப்ஸ் இல் அடங்கியுள்ளன. பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே கலோரிகள் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே ஒவ்வொரு முறையும் இதை சாப்பிடும் போதும் அளவை கருத்தில் கொள்வது அவசியம்.