ஆன்மிகம்செய்திகள்

தினம் ஒரு கோயில்… திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோயிலின் தல சிறப்பு

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கொல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிராகாரங்கள் லிங்கங்கள், 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள் 4க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்கும் இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்ட 4000 முதல் 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேர் இத்திருக்கோயில் தேராகும், திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3கி.மீ. தொலைவிலுள்ள சிவாலயத்தில் விளமல் பாத தரிசனம் காண்பது சிறப்பு, கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள் உள்ளது. முற்காலத்தில் திருவிழாக் காலங்களில் பந்தல் போடுவதற்காக இந்த தூண்கள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த சிறிய மரகதலிங்கத்திற்கு தான் காலை 8.30. 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில் பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும். அம்மனின் சக்தி பீடங்களில் இது கமலை சக்தி பீடமாகும் .

நன்றி:- தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *