Thirupugazh Song 311 : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 311
அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது.
பாடல் வரிகள்
செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்
செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்
சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் …… தவிகாரம்
திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்
செனனபங் கத்துத் துக்கக டற்கண்
திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் …… கரணாதி
குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்
குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்
குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் …… தடுமாறுங்
குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்
சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்
குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் …… படிபாராய்
படிதருங் கற்புக் கற்பக முக்கண்
கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்
பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் …… குமரேசா
பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்
பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்
பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் …… குருநாதா
தொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ்
சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந்
துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் …… குறமானின்
சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந்
துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும்
சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் …… பெருமாளே.