Thirupugazh Song 293 : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 293 முடித்த குழலினர் ( திருத்தணிகை )
அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது
பாடல் வரிகள்
முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தி லிலகிய …… விழியாலும்முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும் இளைத்த இடையினு …… மயலாகிப்படுத்த அணைதனி லணைத்த அவரொடு படிக்கு ளநுதின …… முழலாதேபருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன பதத்து மலரிணை …… யருள்வாயேதுடித்து தசமுகன் முடித்த லைகள்விழ தொடுத்த சரம்விடு …… ரகுராமன்துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு துலக்க அரிதிரு …… மருகோனேதடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு தழைத்த கதலிக …… ளவைசாயத்தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில் தழைத்த சரவண …… பெருமாளே.
பாடல் விளக்கம்
நன்றாக முடிந்த கூந்தலை உடையவர்கள், தேன்
வடிகட்டினதென இனிக்கும் பேச்சுக்களை உடையவர்கள் ஆகிய விலைமாதர்கள் முகத்தில் விளங்கும் கண்ணாலும், மலை போன்ற மார்பகங்கள் மீது அசைகின்ற ஆடையாலும், மெல்லிய இடையாலும் காம மயக்கம் கொண்டவனாகி,படுத்த படுக்கையில் தழுவிய அந்த மாதர்களோடு இந்தப் பூமியில் நாள்தோறும் திரியாமல், பருமையான மயில் மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே வந்து உனது பாத மலரடி இணைகளைத்
தந்து அருள்வாயாக.
துடிதுடித்து பத்துத்தலை ராவணனுடைய
கிரீடம் அணிந்த தலைகள் அறுபட்டு விழுமாறு பூட்டிய அம்பினைச் செலுத்திய ரகுராமனும், பாதத்தால் மிதித்து இந்த உலகை ஓரடியால் அளந்து விளங்கக் காட்டியவனுமான திருமாலின் அழகிய மருகனே, குளத்தில் வாழ்கின்ற கயல் மீன்கள் வயல்களில் காணும்படி நீந்திச் செல்ல, தழைத்த வாழை மரங்கள் சாய்கின்ற செழிப்பையும், அழகையும் கொண்ட திருத்தணிகையில் களிப்புடன் வீற்றிருக்கும் சரவணனே, பெருமாளே.