ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

Thirupugazh Song 288: திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 288 பொற் பதத்தினை ( திருத்தணிகை )

கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது. பாடல் தலைவனை (முருகனை) பிரிந்த தலைவியின் வருத்தம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

பாடல் வரிகள்

பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
     பொற்பு ரைத்து நெக்கு ருக்க …… அறியாதே

புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க
     புத்தி யிற்க லக்க மற்று …… நினையாதே

முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
     முற்க டைத்த வித்து நித்த …… முழல்வேனை

முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
     முத்தி சற்றெ னக்க ளிப்ப …… தொருநாளே

வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
     வித்த கத்தர் பெற்ற கொற்ற …… மயில்வீரா

வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு
     மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி …… லுறைவோனே

கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
     கற்பு ரத்தி ருத்த னத்தி …… லணைவோனே

கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த
     கைத்தொ ழுத்த றித்து விட்ட …… பெருமாளே.

பாடல் விளக்கம்

உன் அழகிய பாதங்களைத் துதித்து உயர்ந்த பதவியை அடைந்த பக்தர்களுடைய சிறப்பினை எடுத்துரைத்து உள்ளம் நெகிழ்ந்துருகத் தெரியாமலும்,
புத்தகத்தைக் கற்று அவற்றைப் பிதற்றுவதை விட்டு, ஞானத்தால் உன்னைத் துதித்திட கலக்கமற்ற புத்தியுடன் உன்னை நினையாமலும், இந்தப் பூமியில் பிறத்தலில் நான் முற்பட்டவனாகி, பின்னர் இங்கு நான் செய்யும் அக்ரமமான செயல்கள் நிரம்பி, பிறருடைய வாசல்களின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற என்னை, அடியோடு இந்த இழிவான பிறப்பினுள் விழுந்து கிடப்பதில் இருந்தும் நீக்கி, மோக்ஷ இன்பத்தை சிறிது நீ எனக்கு அளித்தருளும் ஒரு பாக்கிய நாள் கிடைக்குமா?


இமயமலை அரசன் போற்றி வளர்த்த பராசக்தியான பார்வதிக்கு தன் இடது பாகத்தை அன்புடன் அளித்த ஞான முதல்வரான
சிவபிரான் பெற்ற வெற்றி மயில் வீரனே,
கல்வி, உண்மை இவை இடம் பெற்ற முத்தமிழ் மொழியின் சொல்லும் பொருளோசையும் நீடித்திருக்கும் மெய்ம்மைத் திருத்தணி மலையில் வாழ்பவனே, கற்பக விருட்சங்கள் போன்ற மரங்கள் உள்ள வள்ளிமலைப் புனத்தில் வாழும் குறத்தி வள்ளியின் கச்சு நெருக்கும் அழகுள்ள பச்சைக் கற்பூர மணம்
வீசும் திருமார்பை அணைபவனே,


பகைத்த அரக்கர் கூட்டம் சிதறுண்டு அழியுமாறு கோபித்து, வஜ்ராயுதனாம் இந்திரனுக்கு சூரன் இட்ட கை விலங்கை முறித்தெறிந்து அருளிய பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *