Thirupugazh Song 278: திருப்புகழ் பாடல் வரிகள் 278 நினைத்தது எத்தனை (திருத்தணிகை)
கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது.
பாடல் வரிகள்
நினைத்த தெத்தனையிற் …… றவறாமல் நிலைத்த புத்திதனைப் …… பிரியாமற்
கனத்த தத்துவமுற் …… றழியாமற் கதித்த நித்தியசித் …… தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் …… கெளியோனே மதித்த முத்தமிழிற் …… பெரியோனே
செனித்த புத்திரரிற் …… சிறியோனே திருத்த ணிப்பதியிற் …… பெருமாளே.
பாடல் விளக்கம்
நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும் , நிலையான ஞானத்தை விட்டு
யான் பிரியாமல் இருக்கவும், பெருமை வாய்ந்த
தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழ வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக.
மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளிய . மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவமியோ திருத்தணிகைப் பதியில் எழுந்தருளி உள்ள பெருமாளே.