ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

Thirupugazh Song 274: திருப்புகழ் பாடல் வரிகள் 274 துப் பார் அப்பு ( திருத்தணிகை)

கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது.

பாடல் வரிகள்

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் சொற்பா வெளிமுக் ……

குணமோகம்துற்றா யப்பீ றற்றோ லிட்டே சுற்றா மதனப் ……

பிணிதோயும்இப்பா வக்கா யத்தா சைப்பா டெற்றே யுலகிற் ……

பிறவாதேஎத்தார் வித்தா ரத்தே கிட்டா எட்டா அருளைத் ……

தரவேணும்தப்பா மற்பா டிச்சே விப்பார் தத்தாம் வினையைக் ……

களைவோனேதற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ தத்தாய் தணிகைத் ……

தனிவேலாஅப்பா கைப்பா லைப்போல் சொற்கா வற்பா வைதனத் ……

தணைவோனேஅத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமரப் …… பெருமாளே.

பாடல் விளக்கம்

உணவைத் தரும் மண், நீர், அசைகின்ற
நெருப்பு, நெருங்கி வீசும் காற்று, புகழ்மிக்க
பரந்த ஆகாயம் ஆகிய ஐம்பொரும் பூதங்களும், த்வம், ராஜம், தாமசம் போன்ற மூன்று குணங்களும் மண், பெண், பொன் போன்ற மூவாசைகளும் மேலே சொன்னவை யாவும் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளதும்,.ஒன்பது துவாரங்களுடன் கிழிந்த தோலை வைத்துச் சுற்றி மூடப்பட்டதும், காமநோய் தோய்ந்துள்ளதும் ஆகிய இந்தப் பாவம் நிறைந்த உடல்மீது ஆசைப்படுவதை மேற்கொண்டு, உலகில் மீண்டும் மீண்டும் யான் பிறக்காமல், உன்னைத் துதிக்காதவர்களின்
கல்வி சாமர்த்தியத்தில் கிடைக்காததும் அவர்களுக்கு எட்டாததுமான உன் திருவருளைத் தந்துதவ வேண்டும்.

தவறாமல் உன்னையே பாடித் தொழுபவர்கள் எவரெவரோ அவரவர்களின் வினைகளை
நீக்குபவனே,செருக்கும், ஆக்ஞாசக்கரமும் உடைய சூரனை அழித்தவனே, மெய்யான சிவஞான பண்டிதனேதிருத்தணிகை மலைமீது வீற்றிருக்கும் ஒப்பற்ற வேலவனே அந்த சர்க்கரைப் பாகு போன்ற, பாலைப் போன்ற, இனிய சொல்லும், தினைப்புனக் காவல் தொழிலும் உள்ள வள்ளியை மார்புறத் தழுவுபவன உயர்ந்தவனே, என்றும்
உள்ளவனே, பாசங்களில் நீங்கியவனே, சித்தனே, பரம பிதாவே, குமாரக் கடவுளே,
பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *